சர்வதேச சுற்றுலாத் தலமாக மாறவிருக்கும் லடாக் மற்றும் கார்கில்!

சர்வதேச சுற்றுலாத் தலமாக மாறவிருக்கும் லடாக் மற்றும் கார்கில்!

Update: 2021-01-25 13:59 GMT

ஜம்மு&காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து திரும்பப்பெற்று சட்டம் 370 திரும்பப்பெற்ற பின்பு, தற்போது லடாக் மற்றும் கார்கில் ஆகிய யூனியன் பிரதேசங்கள் சர்வதேச சுற்றுலா தளமாக மாற்றப்பட்டு வருவதாக மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சார துறை அமைச்சர் பிரஹால்ட் சிங் படேல் தெரிவித்தார். 

NEAT கார்கில் 2021 யின் திறப்பு விழாவிற்குப் பின்பு IANS க்கு உரையாற்றிய அவர், சுற்றுலாப் பயணிகளுக்காகத் தேவையான அனைத்து வளங்களையும் சுற்றி பார்ப்பதற்கு ஏற்றவாறு வரைபடங்கள் தயாரித்து வருவதாகவும் மற்றும் கார்கில் மிகவும் அழகாக உள்ளதாகவும் மற்றும் இதற்கு மேல் இந்தியாவை விட்டு வெளிநாட்டிற்குச் சுற்றுலா செல்ல தேவையிருக்காது என்று அவர் குறிப்பிட்டார். 
உலக அளவில் அதிக வளங்கள் இருந்த போதிலும் கார்கில் அதிக அங்கீகாரத்தைப் பெறவில்லை. தற்போது யூனியன் பிரதேசங்களை மேம்படுத்தச் சுற்றுலா மற்றும் கலாச்சார துறை இணைந்து செயல்பட்டு வருகின்றது. கார்கில் பற்றிய மக்களின் கருத்துக்களுக்கும் தற்போது மாறிவருகிறது என்று அவர் கூறினார்.
"2.20 கோடி மக்கள் இந்தியாவில் இருந்து வெளிநாட்டிற்குச் சுற்றுலா செல்கின்றனர் மற்றும் வெளிநாட்டில் இருந்து 1.80 கோடி பேர் இந்தியாவிற்குச் சுற்றுலா வருகின்றனர். அவை அனைத்தும் கார்கிலையே உள்ளது. நாம் அதன் அழகை வெளிப்படுத்தாமல் இருந்திருக்கலாம். பிரதமர் நரேந்திர மோடி யூனியன் பிரதேசங்களை மேம்படுத்துவதற்கான திட்டங்களைப் பெரியளவில் ஏற்படுத்தி உள்ளார்," என்று படேல் கூறினார்.
 
ஊடக திட்டத்தின் ஒரு பகுதியாக, வீடியோக்கள் உருவாக்கப்பட்டு மற்றும் அமைச்சகத்தின் வலைத்தளங்களில் போடப்படும். "கார்கில் அழகு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த அனைத்து முயற்சிகளும் ஏற்படுத்தப்படுகின்றது. இந்த இடங்களுக்குச் செல்லும் சுற்றுப்பயணிகள் தங்கள் வீடியோக்களை அமைச்சகத்தின் வலைத்தளத்தில் வெளியிடலாம்," என்று படேல் கூறினார். 
தேவையான வேலைகளைச் செய்ய யாரும் டெல்லிக்குச் சொல்லத்தேவையில்லை இங்கிருந்தே அனைத்து வேலைகளையும் செய்யலாம் என்று அமைச்சகத்திடம் இருந்து உத்தரவு வந்ததாக அவர் தெரிவித்தார். மேலும், "தற்போது கார்கிலில் பனி ஏறும் மற்றும் சறுக்கும் நிறுவனம் தொடங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றது. இதற்காக நிலம் கையக படுத்துவது மற்றும் விரைவில் நிறுவனத்தைத் தொடங்குவதற்கான பணியும் தொடங்கும்," என்று அவர் கூறினார். 

Similar News