இந்தியாவில் வேகமாக பரவும் லம்பி வைரஸ் - 57 ஆயிரம் கால்நடை இறப்பு!
இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் மிகவும் வேகமாக பரவி வரும் லம்பி வைரஸ் நோய் தொற்று.
இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் வேகமாக பரவி வரும் இந்த ஒரு நோய் தொற்று காரணமாக, இதுவரை 57 ஆயிரத்திற்கு அதிகமான கால்நடைகள் இறந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியில் ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக லம்பி என்று இந்த ஒரு நோய் தொற்று கால்நடைகளுக்கு அதிகம் பரவுவதாகவும் கூறப்படுகிறது. இந்த வைரஸ் காரணமாக பசுக்கள் அதிகமாக தாக்கப்பட்டு வருகின்ற. தற்போது மாநிலங்களின் பரவி வரும் இந்த வைரஸை தடுப்பதற்கு மாநில அரசாங்கம் மற்றும் மத்திய அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றது.
பசுக்களை அதிகமாக தாக்கும் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் வேகமாக பரவும் லம்பி வைரஸ் நோய்த் தொற்று காரணமாக பால் உற்பத்தி பாதிக்கப்படவில்லை என்றும் மத்திய அரசின் சார்பாக கூறப்பட்டுள்ளது. ராஜஸ்தான், ஹரியானா, பஞ்சாப், குஜராத் ஆகிய மாநிலங்களில் கால்நடைகளின் இந்த வைரஸ் அதிகமாக தாக்கி பாதித்து வருகின்றது. இந்த நோயின் காரணமாக அதிக அளவில் பசுக்கள் தான் இறந்துள்ளன. அவற்றை குழி தோண்டி பல்வேறு கிராம வாசிகள் புதைத்து வருகிறார்கள்.
தற்போது வரைக்கும் நாடு முழுவதும் 75 ஆயிரத்திற்கு மேலான பசுக்கள் இந்த நோயினால் தாக்கப்பட்டு இறந்துள்ளது. இவற்றில் 37 ஆயிரம் பசுக்கள் மட்டும் ராஜஸ்தானில் இருந்து இறந்துள்ளன. இதுகுறித்து மத்திய மீன்வளம் விலங்குகள் மற்றும் பால்வினைத் துறை அமைச்சர் கூறுகையில், "தற்போது நம்பி வைரஸ் நாட்டின் ஆறு முதல் ஏழு மாநிலங்களில் அதிகமாக பரவியுள்ளது. குறிப்பாக குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம் மாநிலங்களில் பரவி வருகிறது. ஆந்திர பிரதேசத்திலும் சில பசுக்கள் இந்த வைரஸ் காரணமாக இறந்துள்ளன. தொடர்ச்சூழலை நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். இவற்றிற்கு எதிராக தற்போது தடுப்பூசிகளும் மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டுள்ளது" என்று அவர் கூறியிருக்கிறார்.
Input & Image courtesy: News