பாதிரியாரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பெண்ணுக்கு 64 லட்சம் இழப்பீடு வழங்க லயோலா கல்லூரிக்கு உத்தரவு!

பாதிரியாரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பெண்ணுக்கு 64 லட்சம் இழப்பீடு வழங்க லயோலா கல்லூரிக்கு உத்தரவு!

Update: 2020-12-24 15:18 GMT

பெண்கள் பல கல்வி நிலையங்களிலோ அல்லது நிறுவனங்களின் பணி புரியும் போது மற்றவர்கள் ஏற்படுத்தும் தொல்லையால் அவர்களுக்கே பாதிப்பு ஏற்பட்டு வேலையைக் கைவிட வேண்டியிருக்கின்றது. தற்போது நிறுவனத்தில் பணிபுரியும் ஒரு பெண் ஊழியர் பாதிரியார் ஒருவரால் பாலியல் துன்புறுத்தல்களுக்கு  உள்ளாக்கப்பட்டுள்ளார். அதற்காகச்  சென்னை லயோலா கல்லூரி தனது கல்லூரியில் பணிபுரிந்த மேரி என்ற ஊழியருக்கு 64.3 லட்ச இழப்பீடு தொகையை வழங்க மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதில் அவருடைய 81 மாத ஊதியமும் அடங்கும் என்று கூறப்பட்டுள்ளது. 

ஆணையத்தின் அறிக்கைப்படி, பாதிக்கப்பட்ட பெண் கல்லூரியில் தனது சேவையைச் சிறப்பாகச் செய்ததற்கான பதிவை வைத்துள்ளார் மற்றும் அவரை இதுபோன்று வேலையிலிருந்து நிறுத்துவதற்கு எந்த காரணமும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளது. மேலும் இவர் முன்னாள் மாணவர் சங்கத்தின் உறுப்பினரான பாதிரியார் சேவியர் அல்போன்ஸ் SJ யால் பல துன்புறுத்தல்கள் மற்றும் பாலியல் துன்புறுத்தல்களை எதிர் கொண்டுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது. கடந்த பத்து ஆண்டுகளாக நடவடிக்கை எடுப்பதில் நிர்வாகம் இழுத்து வந்தது என்று குற்றம்சாட்டினார் மற்றும் அதன் பின்னர் மெட்ராஸ் உயர்நீதி மன்றத்தை அணுகியதாகவும் கூறினார். 

இந்த ஆண்டு நவம்பர் மாதம் மகளிர் ஆணையத்தை அவர் அணுகியுள்ளார். டிசம்பர் 15 இல் ஆணையம் விசாரணையை மேற்கொண்டுள்ளது. மேரியின் கூற்றுப்படி, பத்து ஆண்டுகளுக்கு முன்னர் லயோலா கல்லூரியின் அலுவலகம் மற்றும் முன்னாள் மாணவ சங்கத்துக்கு நிர்வாகியாக நியமிக்கப்பட்டதிலிருந்து துன்புறுத்தல்களை எதிர்கொண்டதாகக் கூறியுள்ளார். அப்போது அவர் பாதிரியார் சேவியர் அல்போன்ஸ் கல்வி உதவித் தொகையைத் தவறாகப் பயன்படுத்தி வருவதாகக் குற்றம்சாட்டியதாகத் தெரிவித்துள்ளார். 

இந்த குற்றச்சாட்டுகளைக் கல்லூரியின் முதல்வருக்குக் கொண்டு சென்ற பிறகு பாதிரியாரின் நிதி அதிகாரங்கள் குறைக்கப்பட்டன. அதற்குப் பழிவாங்கும் நோக்கில் தன்னை துன்புறுத்தத் தொடங்கியதாகக் குற்றம்சாட்டினார். இதற்காக நிறுவனம் பாதிரியார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் கூறினார். பின்னர் 2014 இல் மேரி வேலைக்கு வருவதிலிருந்து தடுத்து நிறுத்தப்பட்டார். இவர் இழப்பீடு வழங்கி மீண்டும் வேலைக்கு அழைப்பதாக உறுதியளிக்கப்பட்டாலும், திருப்பி வேலைக்கு வருவதற்கான எந்த அழைப்பும் வரவில்லை என்றும் மேரி கூறியுள்ளார்.

Similar News