மகாராஷ்டிரா: இலவச வெளிநாட்டுக் கல்வித் திட்டத்தில் பயன்பெறும் IAS அதிகாரிகளின் குழந்தைகள்.!

மகாராஷ்டிரா: இலவச வெளிநாட்டுக் கல்வித் திட்டத்தில் பயன்பெறும் IAS அதிகாரிகளின் குழந்தைகள்.!

Update: 2020-12-04 08:00 GMT
மகாராஷ்டிரா கல்வித் திட்டத்தில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை (SC) சேர்ந்த நிதி இழந்த மாணவர்களுக்கு இலவச வெளிநாட்டுக் கல்வியை வழங்கும் நோக்கத்துடன் தொடங்கப்பட்ட திட்டத்தில் பயனாளிகளின் IAS அதிகாரிகளின் குழந்தைகளும் இடம்பெற்றுள்ளனர். 

அறிக்கையின் படி, இந்த ஆண்டு இந்த திட்டம் மூலம் பயன்பெறும் பயனாளிகளில் இரண்டு IAS அதிகாரிகளின் குழந்தைகள் இடம்பெற்றுள்ளனர். இந்த திட்டத்தின் மூலம் அவர்களின் கல்விக் கட்டணம், செலவுகள், விமான கட்டணங்கள், கணினி மற்றும் புத்தகங்கள் வாங்குவது போன்ற செலவுகளையும் எந்த வரம்பும் இன்றி அரசு முழுவதுமாக ஏற்கின்றது. 

இந்த திட்டமானது நிதியிழந்த SC மாணவர்கள் தங்கள் கனவுகளை நிறைவேற்ற உலகில் சிறந்த 100 பல்கலைக்கழகத்தில் பயில விரும்புபவர்களுக்காகக் கொண்டுவரப்பட்டது. தற்போது 2014 இல் வருமான வரம்பு நீக்கப்பட்ட பின்னும் பிறகு இந்த திட்டம் அரசு ஊழியர்கள் மற்றும் அமைச்சர்களின் குழந்தைகளுக்கும் உதவுகின்றது. 

இந்த ஆண்டு இந்த திட்டத்தில் பயன்பெறும் மாணவர்கள் இருவரும் சோலாப்பூர் ஆட்சியர் மிலிந்த் ஷம்பர்கர் மற்றும் சமூக நீதித் துறையின் முதன்மை செயலாளர் ஷியாம் தாகடே முதலியோர் குழந்தைகள் ஆவர். இவர்கள் இருவரதும் ஆண்டு வருமானம் 23.6 லட்சம் மற்றும் 38 லட்சம் ஆகும். 

இந்த ஆண்டு மே மாதத்தில் சமூக நீதித் துறை ஆண்டு வருமானம் 6 லட்சமாக அறிமுகப்படுத்தும் திட்டம் கொண்டுவரப்பட்டது, இருப்பினும் போராட்டங்களால் அது நிறுத்தி வைக்கப்பட்டது. 

Similar News