மருத்துவ சேவைகளின் உபகரண உற்பத்தி: தற்சார்பு இந்தியா பயணத்தில் முக்கிய மைல்கல்!
இறக்குமதி சுமையை குறைப்பதற்காக முக்கிய மருந்துகள் உற்பத்தியில் கவனம் செலுத்தப்படும்.
இறக்குமதி சுமையை குறைப்பதற்காக முக்கிய மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்து தொடர்பாக மத்திய அரசு முனைப்புடன் செயல்படுகிறது என்று மத்திய சுகாதார மற்றும் இரசாயனத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறியுள்ளார். உள்நாட்டிலேயே மிக முக்கியத்துவம் வாய்ந்த மருத்துவ சேவைகளுக்கான உபகரணங்களை உற்பத்தி செய்வது தற்சார்பு இந்தியா என்ற கொள்கையின் பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல் ஆகும். மத்திய அரசின் தற்சார்பு இந்தியா கொள்கையின் கீழ் மருந்துகள் துறை உற்பத்தித் தொடர்பான ஊக்கத்தொகை திட்டத்தை கடந்த 2021ம் ஆண்டு தொடங்கியது.
இந்தத் திட்டத்திற்கு 6 ஆண்டு காலத்திற்கு ரூ.15,000 கோடிகள் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் பங்கேற்க 55 விண்ணப்பங்கள் வந்துள்ளது. இதில் 20 குறு, சிறு, நடுத்தரத் தொழில்துறை நிறுவனங்களும் அடங்கும். விண்ணப்பதாரர்கள் அளித்த தகவல்களின் அடிப்படையில் 2022-2023 நிதியாண்டில் சுமார் ரூ.2200 கோடி ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உற்பத்தி தொடர்பான ஊக்கத்தொகை திட்டம் தொடர்பாக அதிகளவில் மருந்துப் பொருட்களை வாங்குபவர்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களை வாங்குபவர்கள் என இரண்டு வகையாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்து ஓராண்டு காலகட்டத்தில் பல்வேறு முக்கிய செயல்பாடுகளை மேற்கொண்டுள்ளது. மேலும் சுமார் 1900 பேர்களுக்கு மேல் திட்டத்தின் கீழ் பயன்பாட்டை பெற இருக்கிறார்கள்.
Input & Image courtesy: News