ரூ.3.25 லட்சம் கோடி மதிப்பில் இந்தியா பிரான்சிடம் இருந்து 114 ரபேல் போர் விமானங்களை வாங்க ஒப்புதல்!!
By : Bharathi Latha
Update: 2026-02-13 12:09 GMT
பிரான்சிடம் இருந்து 114 ரபேல் போர் விமானங்களை வாங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் வரும் 17-ம் தேதி இந்தியா வரும்போது கையெழுத்தாகும்.
இந்த விமானங்களின் மதிப்பு ரூ.3.25 லட்சம் கோடி. இந்தியாவில் தயாரிக்கப்படும் இந்த விமானங்களுக்கான தொழில்நுட்ப பரிமாற்றத்தை டசால்ட் ஏவியேஷன் வழங்கும்.
பாதுகாப்பு கொள்முதல் கவுன்சிலின் ஒப்புதலை அடுத்து, இந்த திட்டத்துக்கு பாதுகாப்புக்கான மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளிக்க வேண்டும். இதன்மூலம், இந்திய விமானப் படையின் வலிமை அதிகரிக்கும்.