பிரம்மபுத்திரா நதியின் கீழ் இரட்டை சுரங்கப் பாதைகள்!! மத்திய அமைச்சரவை ஒப்புதல்!!

Update: 2026-02-16 07:03 GMT

மத்திய அமைச்சரவை அசாமில் பிரம்மபுத்திரா நதியின் கீழ் ரூ.18,662 கோடி செலவில் இரட்டை சுரங்கப் பாதைகள் அமைக்க  ஒப்புதல் அளித்துள்ளது. ஒரு சுரங்கப் பாதையில் ரயில்களும், மற்றொரு சுரங்கப் பாதையில் வாகனங்களும் இயக்கப்பட உள்ளன.


கோஹ்பூரில் இருந்து நுமலிகர் வரை 240 கி.மீ. தொலைவை சாலை மார்க்கமாக கடக்க 6 மணி நேரமாகும் நிலையில் பிரம்மபுத்திரா நதியின் அடியில் சுரங்கப் பாதை அமைக்கப்பட்டால் 20 நிமிடங்களில் கோஹ்பூரில் இருந்து நுமலிகர் சென்றடைய முடியும்.


இந்த திட்டத்தால் அசாம் மட்டுமின்றி ஒட்டுமொத்த வடகிழக்கும் பலன் அடையும். வர்த்தகம், சுற்றுலா மேம்படும். சரக்கு, பயணிகள் போக்குவரத்து செலவு கணிசமாக குறையும். பாதுகாப்பு ரீதியாகவும் முக்கியத்துவம் உள்ளது.

Tags:    

Similar News