மாவோயிச அச்சுறுத்தல் முடிவுக்கு வரும்!! அமித் ஷா உறுதி!!

Update: 2026-02-10 10:37 GMT

மாவோயிச அச்சுறுத்தல் முடிவுக்கு வரும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார். சத்தீஸ்கரில் நடைபெற்ற 'பஸ்தர் பண்டும் 2026' நிகழ்ச்சியில் பேசிய அவர், மாவோயிசம் சமூகத்துக்கு பயன் அளித்தது கிடையாது, அது அழிவையே பரப்பியது என்றார்.


மார்ச் 31-ம் தேதிக்குள் நாட்டில் இருந்து மாவோயிச அச்சுறுத்தல் அகற்றப்படும் என அமித் ஷா உறுதியளித்தார். மாவோயிஸ்டுகள் சரணடைந்து பொது நீரோட்டத்தில் இணைய வேண்டும், அவர்களுக்கு கண்ணியமான மறுவாழ்வு அளிக்கப்படும் என்றார்.


துப்பாக்கிச் சூடு நடத்துபவர்கள், கண்ணிவெடிகளை புதைப்பவர்கள், பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளைக் கொளுத்துபவர்கள் மன்னிக்கப்பட மாட்டார்கள் என எரிந்தார். பஸ்தர் விரைவான வளர்ச்சிப் பாதையில் உள்ளது, அடுத்த 5 ஆண்டுகளுக்குள் நாட்டின் மிகவும் வளர்ந்த பழங்குடியினர் ஆதிக்கம் செலுத்தும் பகுதியாக மாறும் என்றார்.


இதைத்தொடர்ந்து அமித் ஷா பஸ்தர் பண்டும் 2026 நிகழ்வின் வெற்றியாளர்கள் குடியரசுத் தலைவர் மாளிகைக்கு அழைக்கப்படுவார்கள் என கூறினார்.

Tags:    

Similar News