மத்திய அரசின் மருத்துவக் கல்வி விரிவாக்கம்!! அரசு மருத்துவக் கல்லூரிகளில் 10,023 கூடுதல் இடங்கள்!!

Update: 2026-02-17 01:35 GMT

அரசு மருத்துவக் கல்லூரிகளில் கூடுதலாக 10,023 இடங்களை அதிகரிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதில் எம்பிபிஎஸ் படிப்புக்கு 5,023 இடங்களும், முதுநிலை மருத்துவப் படிப்புக்கு 5,000 இடங்களும் ஒதுக்கப்படும்.


இந்த கூடுதல் இடங்கள் 2025-2026 முதல் 2028-2029 வரை அமல்படுத்தப்படும். இதற்கு ஒவ்வொரு இடத்துக்கும் ரூ.1.50 கோடி செலவிடப்படும். இந்த தொகையில் அரசு மருத்துவக் கல்லூரிகளின் உள்கட்டமைப்பு வசதிகள், ஆய்வகங்கள், கருவிகள் போன்ற மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படும்.


இந்த புதிய திட்டத்தில் கிராமப்புறங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இதன் மூலம் இந்தியாவில் மருத்துவக் கட்டமைப்பு அதிகரிக்கும்.

Tags:    

Similar News