பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்த புதிய பிரதமர் அலுவலகம் சேவா தீர்த்!!
By : Bharathi Latha
Update: 2026-02-15 10:36 GMT
நாடாளுமன்ற வளாகத்தில் ரூ.1,189 கோடி செலவில் கட்டப்பட்ட புதிய பிரதமர் சேவா தீர்த் அலுவலகத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். இந்த அலுவலகம் சுமார் 5 ஏக்கர் பரப்பில் கட்டப்பட்டுள்ளது.
சேவா தீர்த் 1, சேவா தீர்த் 2, சேவா தீர்த் 3 என்ற பெயரில் 3 பிரதான கட்டிடங்கள் உள்ளன. பிரதமர் அலுவலகம், கேபினட் செயலாளர் அலுவலகம், தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகம் ஆகியவை இங்கு செயல்படும்.
பிரதமர் அலுவலகத்துக்கு அருகில் ரூ.467 கோடி செலவில் பிரதமரின் வீடு கட்டப்பட்டு வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி, "வளர்ச்சி அடைந்த இந்தியா என்பது கொள்கைகளில் மட்டுமல்ல, நமது நாட்டின் பணியிடங்கள், கட்டிடங்களிலும் எதிரொலிக்க வேண்டும்" என்று கூறினார்.