வீரியமுள்ள புதிய வகை வைரஸ்: விழிப்புடன் இருக்க மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம்!
மிகவும் அதிகமான வீரியமுள்ள பல வகையில் உருமாறியுள்ளதாக சொல்லப்படும் புதிய வகை கொரோனா வைரஸான ‘ஒமைக்கன்’ இருப்பதாக சொல்லப்படும் நிலையில் அனைத்து மாநிலங்களும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
மிகவும் அதிகமான வீரியமுள்ள பல வகையில் உருமாறியுள்ளதாக சொல்லப்படும் புதிய வகை கொரோனா வைரஸான 'ஒமைக்கன்' இருப்பதாக சொல்லப்படும் நிலையில் அனைத்து மாநிலங்களும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
தென்ஆப்பிரிக்கா மற்றும் மொசம்பிக் நாடுகளில் புதிதாக ஒமைக்கான் என்ற கொரோனா வைரஸ் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. இதனை உலக சுகாதார நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த வகை வைரஸானது பல்வேறு வழிகளில் உருமாறியிருப்பதாகவும், முன்பு இருந்த கொரானா வைரஸைவிட மிகவும் மோசமாக பரவும் என்ற செய்திகள் வெளியாகியிருப்பது பொதுமக்களிடையே அச்சத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், ஒமைக்கான் வைரஸை இந்தியாவில் கட்டுப்படுத்துவது குறித்து மத்திய அரசு தீவிர கவனமுடன் செயல்பட்டு வருகிறது. அதன் முதல் நடவடிக்கையாக அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது: ஒமைக்கான் என்ற வைரஸ் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ள நிலையில் தீவிர கண்காணிப்புடன் இருக்க வேண்டும். மேலும், அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணிகளை வேகப்படுத்த வேண்டும். அனைத்து மக்களும் உஷாராக இருக்க அறிவுரை வழங்க வேண்டும். அது மட்டுமின்றி கொரோனா பரிசோதனைகளை அதிகப்படுத்தவும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Source: Dinamalar
Image Courtesy:Mid Day