உள்நாட்டிலேயேத் தயாரிக்கப்பட்ட ஏவுகணை கடற்படையில் இணைந்தது - மேக் இன் இந்தியாவின் அசுரப்பாய்ச்சல்!

உள்நாட்டிலேயேத் தயாரிக்கப்பட்ட ஐ.என்.ஸ் மொர்முகோவ், B15B கிளாஸ் 2வது போர்க்கப்பல் மத்திய பாதுகாப்பு அமைச்சர் முன்னிலையில் கடற்படையில் இணைந்தது.

Update: 2022-12-20 02:58 GMT

மும்பைக் கடற்படைத்தளத்தில் 2022 டிசம்பர் 19ம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில், ஐ.என்.எஸ் மொர்முகோவ் என்ற ஏவுகனைகளைத் தாக்கி அழிக்கும் வல்லமை கொண்டப் போர்க்கப்பல், மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் முன்னிலையில் நேற்று இந்தியக் கடற்படையில் இணைந்தது. இதன்மூலம் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்தியக் கடற்படையில் சேர்க்கப்பட்டுள்ள 2-வது விசாகப்பட்டினம் கிளாஸ் டெஸ்ட்ராயர் இது என்ற பெருமையை, அந்தக் கப்பல் பெற்றுள்ளது. B15B ஏவுகணை அழிப்பானைக் கொண்ட இந்தப் போர்க்கப்பல், கடற்படையின் போர்க்கப்பல் உற்பத்தி அமைப்பு மற்றும் மஸாகான் டாக் கப்பல் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து வடிவமைக்கப்பட்டுள்ளது.


விழாவில் பேசிய மத்திய அமைச்சர், ஐ.என்.எஸ் மொர்முகோவ் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட அதிக சக்திவாய்ந்த போர்க்கப்பல் என்றும், இந்தக் கப்பல், இந்தியக் கடற்படையின் கடல்சார் திறன்களை மேம்படுத்துவதுடன், கடல்பாதுகாப்பை உறுதிசெய்யும் எனவும் தெரிவித்தார். ஐ.எஸ்.எஸ் மொர்முகோவ் , தொழில்நுட்ப ரீதியிலான அதிநவீன ஏவுகணைகளைத் தாங்கிச் செல்லும், வல்லமை கொண்டது என்றார்.


இதில் இடம்பெற்றுள்ள 75 சதவீதத்திற்கும் மேற்பட்ட உபகரணங்கள் உள்நாட்டில் வடிவமைக்கப்பட்டவை என்பது, இந்திய ராணுவம் தற்சார்பு அடைவதற்கான முனைப்பில் இருப்பதற்கு உதாரணம் என்று கூறிய திரு. ராஜ்நாத் சிங், இந்த போர்க்கப்பல், இந்தியாவின் தற்போதைய மற்றும் எதிகாலத் தோவையையும், நட்பு நாடுகளின் தேவையையும் பூர்த்தி செய்யும் என்று குறிப்பிட்டார்.

Input & Image courtesy: PIB

Tags:    

Similar News