பெண்களை மனித கேடயங்களாகப்  பயன்படுத்தும் மாவோயிஸ்ட்கள்.!

பெண்களை மனித கேடயங்களாகப்  பயன்படுத்தும் மாவோயிஸ்ட்கள்.!

Update: 2020-12-20 14:24 GMT

சட்ட விரோத தாக்குதல்களில் ஈடுபடும் மாவோயிஸ்ட் கும்பல்கள் சட்ட விரோத தாக்குதலுக்குப் பெண்களைப் பாதுகாப்பு கவசங்களாகப் பயன்படுத்துவது குறித்து டைம்ஸ் ஆப் இந்தியா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், காவல்துறைக்கு எதிராகத் தாக்குதல் நடத்துவதில் பெண் மாவோயிஸ்ட்கள் முதல் வரிசையில் பயன்படுத்தப்படுகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த அறிக்கையானது கடந்த வாரம் டிசம்பர் 12 இல் சத்தீஸ்கரில் இரண்டு பெண் மாவோயிஸ்ட்கள் கொல்லப்பட்ட பின்பு வந்துள்ளது. கொல்லப்பட்ட மாவோயிஸ்ட்கள் சாவித்திரி மற்றும் ஷோபா என்று அடையாளம் காணப்பட்டு டாரேகாசா மற்றும் மலாஜ்கண்ட் அமைப்பின் உறுப்பினர்கள் என்றும் தெரியவந்துள்ளது.

அதே போன்று நவம்பர் 6 இல் பாதுகாப்புப் படையினர் மற்றும் மாவோயிஸ்ட்டுகளுக்கு இடையே நடைபெற்ற தாக்குதலில் ஷர்தா என்ற பெண் மாவோயிஸ்ட் கொல்லப்பட்டார். இவ்வாறு நடைபெற்ற தாக்குதலில் கடந்த 8 ஆண்டுகளில் ஏழு மாவோயிஸ்ட்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் காவல்துறையால் கொல்லப்பட்ட மாவோயிஸ்ட்களில் அதிகமானோர் பெண்கள் ஆவர். 

நாட்டில் மாவோயிஸ்ட் நடவடிக்கையில் ஆண்கள் மட்டுமல்லாது பெண்களும் அதிக ஈடுபாடு கொண்டுள்ளனர். சமீபத்தில் மத்திய மாவோயிஸ்ட் இராணுவ ஆணையம்(CMC), கடந்த இருபது வருடங்களாக 839 பெண் மாவோயிஸ்ட்கள் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவித்தது.

மார்ச் 2020 இல் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், பெண்களும் மாவோயிஸ்ட் இயக்கத்தில் ஈடுபடுகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் அவர்கள் ஆரம்பத்தில் தயக்கம் அடைந்தாலும், பின்னர் மாவோயிஸ்ட் குழுக்களின் உரைகள் மற்றும் பாடல்களால் ஈர்க்கப்படுகின்றனர். மேலும் கடந்த இருபது வருடங்களாகவே மாவோயிஸ்ட் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 

மேலும் கொல்லப்பட்ட பெண் மாவோயிஸ்ட்கள் குறித்துக் கேட்டபொழுது, IG K P வெங்கடேஸ்வர ராவ், பாதுகாப்புப் படையினருக்கு மாவோயிஸ்ட்களில் பெண்கள் அல்லது ஆண்கள் குறித்து அவர்களுக்குக் கவலையில்லை. மேலும் தாக்குதலின் போது அவர்களைப் பெண்கள் அல்லது ஆண்களா என்று அடையாளம் காணுவதில் நேரத்தை வீணடிக்க முடியாது என்று அவர் தெரிவித்தார்.

மேலும் "காவல் மற்றும் பாதுகாப்புப் படையினர் மீதான IED தாக்குதல்களைப் பெண் மாவோயிஸ்ட்கள் மேற்கொள்கின்றனர். கடந்த வாரம் கொல்லப்பட்ட இருவர் மீதும் 20க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் உள்ளன," என்று ராவ் தெரிவித்தார். 

மேலும் உளவுத்துறை அறிக்கையின் படி, பெண் மாவோயிஸ்ட்கள் பாதுகாப்பு கவசங்களாகவே பயன்படுத்தப்படுகின்றனர் மற்றும் அவர்கள் தலைவருக்கான பயிற்சிகளைப் பெறுவதில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே இது பெண்களை மாவோயிஸ்ட் நடவடிக்கையில் சேருவதில் இருந்து தடுப்பதற்கு ஒரு உதவியாக அரசாங்கத்திற்கு இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு அவர்களே முன்னிலைப் படுத்தப்படுகின்றனர். 

மேலும் இந்த ஆண்டு சர்வதேச பெண்கள் தினத்தில், மாவோயிஸ்ட்கள் முதன்முறையாகப் பெண்களை இந்த இயக்கத்திற்கு ஊக்குவிப்பதற்குத் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட 22 பெண் மாவோயிஸ்ட்களின் அறிக்கையை வெளியிட்டது. மேலும் பிரச்சாரத்தின் போது மாவோயிஸ்ட் தலைவர்கள் பெண்களைத் தவறாக வழிநடத்துகின்றனர்.

 அவர்கள் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட மாட்டார்கள் என்று நம்பவைப்பதாக இராணுவ உளவுத்துறை அதிகாரி வர்ணிக்கா சர்மா தெரிவித்தார். "பெண்களை வெளி வட்டத்தில் பயன்படுத்துவது 2010 இல் தொடங்கப்பட்டது. மேலும் சில மாவோயிஸ்ட் தலைவர்கள் குழந்தைகளைக் கூட பயன்படுத்துகின்றனர்," என்றும் சர்மா கூறினார். 

மேலும் மாவோயிஸ்ட் தரவரிசையில் அடிமட்டத்தில் 60 சதவீதம் பெண்கள் உள்ளனர் மற்றும் 50 சதவீதம் PLGA  பெண்கள் உள்ளனர் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவிக்கின்றது. பாதுகாப்புப் படையினருடன் ஈடுபடும் மோதலின் போது பெண்கள் முன்னால் பயன்படுத்துவதால் அவர்களே அதிகம் பாதிப்படைகின்றனர். 

Similar News