தி.மு.க. அரசு தரவுகளை சமர்ப்பிக்க தவறியதா? வன்னியர் இடஒதுக்கிட்டை ரத்து செய்த உச்சநீதிமன்றம்!
வன்னியர்களுக்கான அரசு வேலை மற்றும் கல்வியில் 10.5 சதவீத உள்ஒதுக்கீடு கடந்த அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்டது. இதற்கிடையில் திமுக அரசு அமைந்த பின்னர் அதற்கு எதிர்த்து சில அமைப்புகள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அதன் அடிப்படையில் இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 1ம் தேதி உச்சநீதிமன்றத்தில் பாமக தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கில் பாமக சமூகநீதி பேரவையின் தலைவர் வக்கீல் பாலு நேரில் ஆஜராகி வாதத்தை எடுத்து வைத்தார். அதன் வாதங்கள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், வன்னியர் இடஒதுக்கீடு ரத்து தொடர்பான தமிழக அரசின் மேல்முறையீடு மனுவை விசாரணை செய்த நீதிபதிகள் நாகேஸ்வராவ், பி.ஆர்.கவாய் அமர்வு தீர்ப்பு வழங்கியது. சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு செல்லும். எனவே 10.5 சதவீத இடஒதுக்கீடு ரத்து செய்யப்படுவதாக அறிவித்தனர். இந்த அறிவிப்பு வன்னியர் மக்களிடையே மிகப்பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. திமுக அரசு சரியான வாதத்தை முன்வைக்கவில்லை என்ற குற்றச்சாட்டை வன்னியர்கள் சமூக வலைதளங்களில் முன்வைத்து திமுகவுக்கு எதிராக கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.
Source, Image Courtesy: Daily Thanthi