கேரளாவில் அடுத்தடுத்து நடக்கும் திருப்பங்கள்: ஆய்வு செய்ய மத்திய குழு விரைவு!

Increase of corona virus in Kerala

Update: 2021-07-29 13:35 GMT

கேரளாவில் குறைந்து கொண்டு வந்த கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை தற்பொழுது மேலும் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இந்தியா முழுவதும் தற்பொழுது இரண்டாம் அலை பாதிப்புகள் குறைந்து வரும் சூழ்நிலையில் கேரளாவில் மட்டும் பாதிப்பு எண்ணிக்கை மேலும் மேலும் அதிகரித்து வருகிறது. ஏற்கனவே கேரளாவில் ஜிகா வைரஸ்களில் பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்தியது. அதற்கிடையில் கொரோனா தொற்றுக்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதற்கிடையில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிப்பதால்  ஆய்வு செய்வதற்காக 6 பேர் கொண்ட குழுவை மத்திய அரசு  அனுப்பியுள்ளது.


இதற்கு முன்பு வரை இந்தியாவில் , மத்திய மாநில அரசுகள் எடுத்த சிறப்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் கொரோனா படிப்படியாக குறைய ஆரம்பித்தது. இருந்த போதிலும் மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களில் பாதிப்பு குறையாமல் இருந்தது. ஆனால் நாளடைவில் மற்ற மாநிலங்களில் கொரோனா குறைந்தாலும், கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்தது. இதனால் ஜூலை 31 மற்றும் ஆகஸ்ட் 1 முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.


இந்நிலையில் கேரளாவில் கொரோனா தொற்று அதிகரிப்பு குறித்து, ஆய்வு செய்வதற்காக 6 பேர் கொண்ட குழுவை மத்திய அரசு அனுப்பியுள்ளது. இந்த குழு கேரளாவில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்தும் தற்பொழுதும் ஆய்வு செய்ய உள்ளது. மேலும் இந்த மருத்துவ குழு சார்பில், தற்போது உள்ள சூழ்நிலையில் தொற்றுக்கள் அதிகரிக்க காரணம் என்ன? மூன்றாம் அலை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதா? அதை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன? என்பது குறித்து ஆய்வுகள் மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

Input: https://m.economictimes.com/news/india/6-member-central-team-to-visit-kerala-as-it-still-reports-high-number-of-covid-cases/articleshow/84850255.cms 

Image courtesy: economic times 


Tags:    

Similar News