வேளாண் பொருட்களுக்கு குறைந்தபட்ச கொள்முதல் விலை தொடரும்.. பிரதமர் மோடி உரை.!
வேளாண் பொருட்களுக்கு குறைந்தபட்ச கொள்முதல் விலை தொடரும்.. பிரதமர் மோடி உரை.!;
வேளாண் பொருட்களுக்கு குறைந்தபட்ச கொள்முதல் விலை தொடரும் என்று பிரதமர் மோடி மாநிலங்களவையில் தெரிவித்துள்ளார்.
மத்திய பட்ஜெட் கூட்டத்தொடரையொட்டி மாநிலங்களவையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பிரதமர் மோடி தற்போது உரையாற்றி வருகிறார்.
அப்போது அவர் பேசியதாவது: வேளாண் பொருட்களுக்கு குறைந்தபட்ச கொள்முதல் விலை தொடரும் என்று பிரதமர் கூறியுள்ளார். மேலும், வேளாண் சீர்த்திருத்தத்தால் வரும் விமர்சனங்களை தான் ஏற்பதாகவும், பாராட்டை எதிர்க்கட்சிகள் ஏற்கட்டும்.
மேலும் விவசாயிகள் போராட்டம் எதனால் நடக்கிறது என விரிவான விவாதம் செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் எனவும் அவர் பேசினார்.
பிரதமர் உரையாற்றும்போது பாஜக எம்.பி.க்கள் மத்திய அமைச்சர்கள் மேஜையை தட்டி தங்களது மகிழ்ச்சியை தெரிவித்து வருகின்றனர்.