கடல்சார் துறையில் இனி டாப்.. தற்சார்பு இந்தியாவை நோக்கி மற்றொரு பயணம்..
கடல்சார் தற்சார்பு இந்தியாவை உருவாக்குவதற்கான சிந்தனைக் கூட்டம்.
"பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் ஆற்றல்மிக்க தலைமையின் கீழ், இந்தியா உலக அளவில் ஒரு புதிய நற்பெயரைப் பெற்றுள்ளது. அதை நாம் மேலும் மேம்படுத்த வேண்டும்” என சர்பானந்தா சோனோவால் கூறினார். துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகம் 2 நாள் சிந்தனைக் கூட்டத்தை கேரளாவின் மூணாறில் தொடங்கியுள்ளது. மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் சர்பானந்த சோனோவால் தலைமையேற்று கூட்டத்தைத் தொடங்கி வைத்தார். துறைக்கான இணை அமைச்சர் ஸ்ரீபத் நாயக், சாந்தனு தாக்கூர், துறை செயலாளர் சுதான்ஷ் பந்த் மற்றும் அனைத்து முக்கிய துறைமுகங்களின் தலைவர்கள், அமைச்சகத்தின் பிற நிறுவனங்கள், பொதுத்துறைத் தலைவர்கள் உள்பட பல மூத்த அதிகாரிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய சோனோவால், கடல்சார் துறையில் இந்தியாவை உலகளாவிய தலைமையாக நிலைநிறுத்த அமைச்சகமும் அதன் ஒவ்வொரு அமைப்புகளும் வெளிப்படுத்திய அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பைப் பாராட்டினார். இணைப்பை மேம்படுத்துதல் மற்றும் புதிய வணிக வாய்ப்புகளை வளர்ப்பதன் முக்கியத்துவத்தை, கடல்சார் துறையின் தாக்கத்தை எளிய மொழியில் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய அவசியத்தை எடுத்துரைத்து அமைச்சகத்தின் இலக்கை வலியுறுத்தினார்.
நமது பிரதமர் நரேந்திர மோடியின் ஆற்றல்மிக்க தலைமையின் கீழ், இந்தியா உலகளவில் ஒரு புதிய நற்பெயரைப் பெற்றுள்ளது. தற்சார்பு இந்தியாவை உருவாக்குவதற்கான நமது பிரதமரின் பார்வையை செயல்படுத்த அமைச்சகம் அனைத்து முக்கிய அமைப்புகளுடனும் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறது என்று அமைச்சர் கூறினார்.
Input & Image courtesy: News