கிறிஸ்துவ அனாதை இல்லங்களில் நடைபெறும் அவலங்கள்: மாட்டிறைச்சி உண்பது கட்டாயமாம் !

கிறிஸ்துவ அனாதை இல்லங்களில் குழந்தைகளுக்கு மாட்டிறைச்சி கொடுக்கும் சம்பவம் வெளி வந்துள்ளது.

Update: 2021-12-24 14:02 GMT

மத்தியப்பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள சாகர் மாவட்டத்தில் பராரு அருகே உள்ள செயின்ட் பிரான்சிஸ் சேவதம் அனாதை இல்லத்தில் இந்து SC குழந்தைகள் மாட்டிறைச்சி சாப்பிடவும், பைபிள் படிக்கவும் கட்டாயப்படுத்தப்பட்டனர். மேலும் அவர்கள் பைபிள் படிப்பது கட்டாயம் ஒரு விஷயமாக வைத்துள்ளார்கள். அப்படி அவர்கள் கொடுக்கும் இந்த செயல்களை செய்யத் தவறும் குழந்தைகளை கடுமையான முறையில் தண்டித்தும் உள்ளார்கள். நிதிநிலையில் மிகவும் பிற்படுத்தப்பட்ட இந்து குழந்தைகள் மற்றும் அவர்கள் படிப்பிற்கு உதவும் வகையில் தான் இந்த அனாதை இல்லம் அமைந்துள்ளதாக வெளியில் புகழாரம் சூட்டிக் கொண்டு, அனாதை இல்லங்களுக்கு உள்ளே பல்வேறு விதங்களில் குழந்தைகளின் சுதந்திரத்தை பறித்து உள்ளார்கள்.  


மேலும் இந்த சம்பவங்கள் மூலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் தந்தைகளின் ஒருவரான தேஷ்ராஜ் என்பவர் மூலம் தான் இந்த சம்பவம் வெளியில் வந்துள்ளது. இவருக்கு நிதி நிலை சரியில்லாத காரணத்தினால் தன் குழந்தை நன்றாக படிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கில் இந்தப் பள்ளியில் சேர்த்துள்ளார். சேர்த்ததில் இருந்து நிர்வாகிகள் இவரை குழந்தைகளை பார்ப்பதற்கு அனுமதிப்பது இல்லையாம். பிறகு பதினெட்டு மாதங்களுக்கு பிறகு, தன் குழந்தை சந்தித்த பிறகுதான் இந்த சம்பவத்தை பற்றி அவருக்கு தெரிய வந்துள்ளது.


அதன் பேரில் அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்த மிஷனரி பள்ளியில் இந்த சம்பவம் நடந்தேறி இருப்பது வெளியுலகத்திற்கு தெரிய வந்துள்ளது. மேலும் இந்த வழக்கை விசாரணை செய்த தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் 48 மணி நேரத்தில் தகுந்த நபர்கள் கைது செய்யப்பட வேண்டும் என்ற உத்தரவை பிறப்பித்துள்ளது.  

Input & Image courtesy: Hindupost




Tags:    

Similar News