இந்தியா இளைஞர்கள் கையில் உள்ளது - நெகிழ்ந்த பிரதமர் மோடி!
காந்தி கிராம பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், கலந்து கொண்ட பிரதமர் இளைஞர்கள் சக்தியை பற்றி எடுத்துரைத்தார்.
மதுரையில் இருந்த ஹெலிகாப்டரில் திண்டுக்கல்லுக்கு வருகை தந்த பிரதமர் மோடியை முதல்வர், தமிழக ஆளுநர், மத்திய இணை அமைச்சர் மற்றும் பல அமைச்சர்கள் வரவேற்றனர். இதனை தொடர்ந்து காந்தி கிராம பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மாணவர்களுக்கு பட்டம் வழங்கிய பின் அவர் உரையாற்றுகையில், இந்தியாவின் எதிர்காலம் இளைஞர்கள் கையில் உள்ளது. அவற்றை மாற்றும் சக்தி இளைஞர்களிடம் உள்ளது என்று கூறினார்.
தற்போது கிராமப்புற மேம்பாடு குறித்து அவரது எண்ணங்கள் மற்றும் உணர்வுகளை மிகவும் பச்சிதமாக இளைஞர்களிடம் எடுத்து தற்போது கிராமப்புற மேம்பாடு குறித்து அவரது எண்ணங்கள் மற்றும் உணர்வுகளை மிகவும் கச்சிதமாக இளைஞர்களிடம் எடுத்து முன் வைத்தார். கிராமத்தின் ஆன்மா; நகரத்தின் வசதி என்பதை எங்கள் கொள்கை காந்தியின் கொள்கை. தற்போது தற்சார்பு திட்டம் தற்போது வளர்ச்சி கிராமத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
மத்திய அரசின் ஒவ்வொரு திட்டத்திலும் சிறப்பம்சமாக கிராமத்தை முன்னேற்றுவதை நோக்கமாகக் கொண்டிருக்கிறது. கிராமங்கள் சுயமாக செயல்பட்டால் நாடும் சுயமாக செயல்படும். குறிப்பாக காது காது பொருட்கள் உலகளவில் கவனம் பெற்று வருகிறது. அந்த வகையில் இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்ப வேண்டும் என்று கூறுகிறார். காசி தமிழ் சங்கம் விரைவில் காசியில் நடைபெற இருக்கிறது. இந்த விழாவில் தமிழகத்தின் மொழி கலாச்சாரம் கொண்டாடப்பட உள்ளது. காசி மற்றும் தமிழகத்திற்கு இடையிலான சிறப்பு மிக்க ஒற்றுமைகளை எடுத்துரைக்கும் நிகழ்வாக இது அமையும் என்று கூறியிருக்கிறார்.
Input & Image courtesy: News