மக்கள் திட்டங்களை கிடப்பில் போடும் சகாப்தம் முடிந்து விட்டது: பிரதமர் மோடி அரசு உருவாக்கிய வரலாறு!
மக்கள் திட்டங்களை கிடப்பில் போடும் சகாப்தம் முடிந்து விட்டதாக பிரதமர் மோடி கூறினார்.
மக்களை காக்க மத்திய அரசு கொண்டுவரும் திட்டங்களை கிடப்பில் போடுவது மற்றும் திட்டங்களை முடிக்காமல் காலம் தாழ்த்துவது போன்றவை நடக்காது. ஏனெனில் அதை நடத்துவதற்கான சகாப்தம் எப்பொழுதும் முடிந்து விட்டதாக பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கூறியிருக்கிறார். இந்திய மக்களின் நலனுக்காக மத்திய அரசு பல்வேறு செயல் திட்டங்களை செய்து வருகிறது. குறிப்பாக பல்வேறு மாநிலங்களுக்கு என்னென்ன? வசதிகள் குறைவாக இருக்கின்றதோ? அவற்றிற்கு ஏற்றவாறு தேவையான பல்வேறு திட்டங்களையும் அதிகரித்துக் கொண்டு வருகின்றது. அப்படி கொண்டுவரும் திட்டங்களை காலம் தாழ்த்தாது விரைந்து முடிக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அருணாச்சல் பிரதேசம் இட்டா நகரில் ரூபாய் 640 கோடி செலவில் விமான நிலையம் கட்டப்பட்டது இதனை பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நாட்டுக்காக அர்ப்பணித்தார். நிகழ்சியில் உரையாற்றிய பிரதமர் 2019 ஆம் ஆண்டு விமான நிலையத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. தேர்தல் காரணமாக இந்த விமான நிலையத்தை கட்ட மாட்டார்கள் என்று பலரும் கருத்து கூறினார்கள். ஆனால் தற்பொழுது தேர்தல் நடைபெறுவதற்கு முன்பே விமான நிலையம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு எப்பொழுதும் மக்கள் நல்லதாக இருக்கக்கூடிய பணிகளை காலம் தாழ்த்துவது கிடையாது.
அந்த சகாப்தம் இப்பொழுது முடிந்துவிட்டது என்று கூறினார். மேலும் எதிர்க்கட்சியினருக்கு இந்த வரிசையில் ஒரு செயலை மக்களுக்கு நன்மை செய்வது பா.ஜ.க பிரதானம் என்று கூறுகிறார். 8,200 கோடி செலவில் நீர் மின் நிலையத்தினை திறந்து வைத்தார். சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளில் வடகிழக்கு மாநிலங்களில் இதுவரை 9 விமான நிலையம் தான் கட்டப்பட்டது. ஆனால் மோடி அரசு பதவி ஏற்ற பின் கடந்த எட்டு ஆண்டுகளில் ஏழு விமான நிலையங்கள் கட்டப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
Input & Image courtesy: Polimer News