அரியானாவில் மாநில உள்துறை அமைச்சர்கள் மற்றும் போலீஸ் டி.ஜி.பி மாநாடு - பிரதமர் மோடி பங்கேற்பு

அரியானாவில் மாநில உள்துறை அமைச்சர்கள் மற்றும் போலீஸ் டி.ஜி.பி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்க இருக்கிறார்.

Update: 2022-10-27 08:42 GMT

இரண்டு நாள் மாநாடு:

அரியானாவில் மத்திய உள்துறை அமைச்சர்கள் மற்றும் போலிஸ் டிஜிபிக்களுக்கான மாநாடு இன்று தொடங்குகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் காணொளி காட்சிகள் மூலமாக பங்கேற்க இருக்கிறார். அரியானா மாநிலம் சூரஜ்குண்டில் மாநில உள்துறை அமைச்சர்கள் மற்றும் போலிஸ் டி.ஜி.பிகள் மாநாடு இன்றும், நாளையும் நடைபெறுகிறது. சிந்தனை அமர்வு என்ற பெயரில் நடக்கிறது. இதில் மாநில உள்துறை செயலாளர் மற்றும் மத்திய போலீஸ் படைகள் மத்திய போலீஸ் அமைப்புகள் ஆகியவற்றின் தலைமை இயக்குனர்களும் கலந்து கொள்கிறார்கள். மாநாட்டில் வெள்ளிக்கிழமை பிரதமர் மோடி காணொளி காட்சி மூலமாக பங்கேற்று பேச இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


பிரதமர் கூறும் ஐந்து உறுதிமொழிகள்:

பிரதமர் மோடி கடந்த சுதந்திர தின உரையில் ஒவ்வொருவரும் ஐந்து உறுதிமொழிகள் எடுத்துக் கொள்ள வலியுறுத்தினார். 2047 ஆம் ஆண்டிற்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற பாடுபடுவேன், அடிமைத்தன அடையாளத்தில் அனைத்தையும் அழிப்பேன், இந்தியாவின் மரபுகளில் பெருமை கொள்வேன் ஒற்றுமைகளை கடைப்பிடிப்பேன், எனது கடமைகளை நிறைவேற்றுவேன் என்பதுதான் அந்த உறுதி மொழிகள். இந்த உறுதி மொழிகளுக்கு ஏற்ப உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பான விவகாரங்களில் கொள்கை வகுப்பது பற்றிய மாநாட்டில் ஆலோசனை நடத்தப்படுகிறது.


மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே இணக்கம்:

போலீஸ்களை நவீனப்படுத்தும், இணைய குற்றங்கள், குற்றவியல் நீதிமுறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாட்டை அதிகரித்தல், நிலையான நிர்வாகம், கடலோர பாதுகாப்பு, பெண்கள் பாதுகாப்பு, போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பிரச்சனைகள் பற்றியும் இந்த மாநாட்டில் விவாதிக்கப்படுகிறது. ஒத்துழைப்பான கூட்டாட்சி என்ற உணர்வில் மாநாடு நடத்தப் படுகிறது. இதனால் மத்திய, மாநில அரசு மட்டத்தில் திட்டமிடுதல் மற்றும் ஒருங்கிணைப்பு மேலும் இணக்கம் உருவாகும் என்றும் எதிர்பார்க்கப் படுகிறது.

Input & Image courtesy: News

Tags:    

Similar News