கொரோனாவை விட கொடிய அரக்கன் -  அதிர்ச்சியளிக்கும் ஆய்வு முடிவு!

கொரோனாவை விட கொடிய அரக்கன் -  அதிர்ச்சியளிக்கும் ஆய்வு முடிவு!

Update: 2020-12-23 17:04 GMT
 கொரோனா எனும் கொடிய அரக்கன் இந்தியாவில் தற்போது வரை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களை பலி வாங்கியுள்ள நிலையில், கடந்த 2019 ஆம் ஆண்டு அதைவிட ஒரு கொடிய அரக்கன் கிட்டத்தட்ட 7 கோடி இந்தியர்களின் மரணத்திற்கு காரணமாக அமைந்துள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

அந்த கொடிய அரக்கன் வேறு யாருமல்ல 'காற்று மாசுபாடு' தான். இந்தியாவில் காற்று மாசுபாடு வேறு எந்த தொற்றுநோயையும் விட ஆபத்தானது என்பதை தொடர்ந்து நிரூபித்து வருகிறது. 2019 ஆம் ஆண்டில் இந்தியாவில் நிகழ்ந்த இறப்புகளில் 17.8 சதவீதம் காற்று மாசுபாட்டுடன் தொடர்புடையது என்று பிரிட்டிஷ் மருத்துவ இதழான 'தி லான்செட்டில்' வெளியான ஒரு ஆய்வு முடிவுகள் தெரிவிக்கிறது.

சுற்றுப்புற மாசுபாடு அல்லது காற்று மாசுபாடு அகால மரணங்கள் மற்றும் நோய்களுக்கு ஒரு முக்கிய காரணம் என்பதை நிரூபித்துள்ளது. இது சர்வதேச அளவில் மிகப்பெரிய சுற்றுச்சூழல் சுகாதார அபாயமாகும். இந்தியாவின் தேசிய தலைநகரான புதுடெல்லியில், வாகன, தொழில்துறை மாசுபாடு, அத்துடன் அருகிலுள்ள மாநிலங்களில் விவசாய கழிவுகள் எரிப்பு ஆகியவை நகரின் காற்றை தொடர்ந்து அசுத்தப்படுத்தி வருகிறது. குறிப்பாக காற்றோட்டம் குறைவாக இருக்கும் குளிர்காலத்தில் நகரத்தில் காற்று மாசுபாடு நிலைமை மோசமடைந்தது.

"2019 ஆம் ஆண்டில் இந்தியாவில் 6.7 கோடி இறப்புகள் காற்று மாசுபாட்டினால் ஏற்பட்டுள்ளது. இது நாட்டின் மொத்த இறப்புகளில் 17.8 சதவிகிதம் ஆகும். இந்த இறப்புகளில் பெரும்பாலானவை சுற்றுப்புற துகள்களின் மாசுபாட்டினால் ஏற்பட்டுள்ளது.

1990 முதல் 2019 வரை வீட்டு காற்று மாசுபாட்டின் காரணமாக இறப்பு விகிதம் 64.2 சதவீதம் குறைந்துள்ளது. அதே நேரத்தில் சுற்றுப்புற மாசுபாடு காரணமாக இறப்பு 115.3 சதவீதம் அதிகரித்துள்ளது" என்று லான்செட் ஆய்வு தெரிவித்துள்ளது. பல்வேறு உத்திகள் மூலம் இந்தியாவில் காற்று மாசுபாட்டை வெற்றிகரமாக குறைப்பது மக்களின் ஆரோக்கியத்திற்கும் பொருளாதாரத்திற்கும் நன்மைகளை அதிகரிக்கும் என்று ஆய்வு மேலும் கூறியுள்ளது. 

Similar News