சிறுமியை மதமாற்றம் செய்யக் கட்டாயப்படுத்திய அசாத் புதிய  லவ் ஜிகாத் சட்டத்தின் கீழ் கைது!

சிறுமியை மதமாற்றம் செய்யக் கட்டாயப்படுத்திய அசாத் புதிய  லவ் ஜிகாத் சட்டத்தின் கீழ் கைது!

Update: 2021-01-22 11:21 GMT
மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஜனவரி 10 இல் லவ்  ஜிகாத் குற்றங்களைத் தடுப்பதற்காகக் கொண்டுவரப்பட்ட கட்டாய மதமாற்றச் சட்டத்தின் கீழ் தற்போது மற்றொரு வழக்குப் பதிவாகியுள்ளது. இந்த வழக்கானது 24 வயது இந்து பொறியியல் மாணவி புதன்கிழமை போபாலில் அளித்த புகாரின் பேரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. 
அளிக்கப்பட்ட புகாரின் பேரில், புகாரளித்த பெண்மணி பாலகாட் மாவட்டத்தில் வசித்து வருகிறார். இவர் 2019 நவம்பரில் பொது போக்குவரத்தில் குற்றம் சாட்டப்பட்ட அசாத் என்னும் நபரைச் சந்தித்துப் பழகி வந்துள்ளார். குற்றச்சாட்டப்பட்டுள்ள அசாத் தன்னை ஒரு அஷு என்று கூறி இந்துவாகக் காட்டிக்கொண்டு அந்த பெண்ணுடன் நெருங்கி வந்துள்ளார். அந்த பெண்ணுக்கு அசாத் திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்தவுடன் இருவரும் உடலுறவில் ஈடுபட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
மார்ச் 2020 இல் அந்த பெண்மணி அசாத்துடன் மசூதிக்குச் சென்றுள்ளார், இதனால் சிறுமி சந்தேகமடைந்துள்ளார். பின்னர் இது குறித்து அவனிடம் கேட்டு அழுத்தம் கொடுத்தவுடன், தான் ஆசாத் என்றும் அஷு இல்லை என்றும் தனது உண்மை சுயரூபத்தை வெளிப்படுத்தியுள்ளார். இதனால் அந்த பெண் அவருடன் இருந்த உறவை முடித்துக் கொண்டுள்ளார்.
அதிலிருந்து ஆசாத் அந்த பெண்ணை பின்தொடர்ந்து, தன்னை திருமணம் செய்து கொண்டு மதமாற்றம் செய்து கொள்ளுமாறு கட்டாயப்படுத்தி வந்துள்ளார். பின்னர் இதுகுறித்து அசோக் கார்டன் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். 
"குற்றம்சாட்டப்பட்ட 30 வயதுடைய ஆசாத் போபால் ஐஷுபாக் பகுதியில் மெக்கானிக்காக பணிபுரிகிறார். தற்போது கைது செய்யப்பட்டு இந்தியத் தண்டனை சட்டம் 376(பலாத்காரம்), 354, 294, 506 மற்றும் மதசுதந்திர தண்டனை சட்டம் 2020 போன்றவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது," என்று போபால் கூடுதல் SP ராஜேஷ் பாதோரிய தெரிவித்தார். 
மேலும் அறிக்கையின் படி, புதிதாகக் கொண்டுவரப்பட்ட மதசுதந்திர சட்டத்தின் கீழ் இரண்டாவதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்காகும். ஜனவரி 17 இல் முதல் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. புதிய மத்தியப் பிரதேச மத சுதந்திர சட்டத்தின் கீழ் ஒருவர் ஒரு மதத்திலிருந்து மற்றொரு மதத்திற்குக் கட்டாயப்படுத்தி மாறுவதைத் தடை செய்யவும், அச்சுறுத்தல், வேறு சக்திகள், திருமணம் அல்லது மோசடி செய்வது போன்றவற்றைத் தடை செய்வதுக்குக் கொண்டுவரப்பட்டது.
இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு இரண்டு முதல் பத்து ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் மற்றும் 50,000 வரை அபராதமும் விதிக்கப்படுகின்றது. மேலும் இது போன்ற சட்டம் உத்தரப் பிரதேசத்தில் கொண்டுவந்ததைத் தொடர்ந்து கொண்டுவரப்பட்டுள்ளது. 

Similar News