ம பி: சீன பட்டாசுகளின் விற்பனைக்கும், பயன்பாட்டிற்கும் மாநிலத்தில் தடைவிதித்த முதல்வர் சிவராஜ் சிங் சவுஹான்.!

ம பி: சீன பட்டாசுகளின் விற்பனைக்கும், பயன்பாட்டிற்கும் மாநிலத்தில் தடைவிதித்த முதல்வர் சிவராஜ் சிங் சவுஹான்.!

Update: 2020-11-05 20:00 GMT
சீன பட்டாசுகளுக்குத் தடைவிதித்து வரவிருக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அதிக அளவில் பயன்படுத்தப் படும் மற்றும் முக்கிய பங்குவகிக்கும் பட்டாசுகள் முக்கிய அறிக்கையை மத்தியப் பிரதேச முதல்வர் வெளியிட்டுள்ளார். புதன்கிழமை அன்று மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுஹான் வெளியிட்ட அறிக்கையில், மாநிலத்தில் சீன தயாரிப்பு பட்டாசுகளுக்கு அதனை விற்பனை செய்வதற்கும் மற்றும் அதனைப் பயன்படுத்துவதற்கும் மாநிலத்தில் தடை விதிக்க அரசு முடிவெடுத்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் இந்த தடை உத்தரவை மீறி சீன பட்டாசுகளைப் பயன்படுத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சவுகான் எச்சரித்தார். "தடை விதிக்கப்பட்ட பட்டாசுகளைப் பயன்படுத்துவோரைக் கண்டறியப்பட்டால், அவர்கள் மீது வெடிபொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் தக்க தண்டனை அளிக்கப்படும்," என்று உள்துறை அதிகாரிகள் மற்றும் காவல் ஆணையர்களுடன் நடந்த சந்திப்பில் சவுகான் தெரிவித்தார்.



மாநிலத்தில் சீன மற்றும் தடை செய்யப்பட்ட பட்டாசுகளைச் சேமித்து வைத்திருப்பது, பயன்படுத்துவது மற்றும் விற்பனை செய்வது போன்றவற்றைக் கண்டறியப்பட்டால், அதனை மீறுபவர்கள் மீது வெடிபொருள் சட்டம் 9-B(1)b சட்டப் பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடவுள் உருவப்படங்கள் போட்ட பட்டாசுகளைப் பயன்படுத்தவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது மற்றும் அதனை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சவுகான் தெரிவித்தார்.



மேலும் மாநிலத்தில் உள்ளூர் பட்டாசுகளைப் பயன்படுத்தவும் மற்றும் உள்ளூர் குயவர்களின் வேலைகளை ஊக்குவிக்கத் தீபாவளி சமயங்களில் அவர்கள் தயாரிக்கும் மண் விளக்குகளைப் பயன்படுத்தவும் சவுகான் மக்களைக் கேட்டுக்கொண்டார்.

Similar News