ஆந்திராவை தாக்கும் மர்ம நோய்.. மருத்துவமனைக்கு நேரில் சென்ற முதலமைச்சர்.!

ஆந்திராவை தாக்கும் மர்ம நோய்.. மருத்துவமனைக்கு நேரில் சென்ற முதலமைச்சர்.!

Update: 2020-12-07 16:40 GMT

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் மர்ம நோயால் பாதிக்கப்பட்டவர்களை முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி நேரில் சென்று ஆறுதல் கூறி வருகின்றார். மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள ஏலூரில் கடந்த 4ம் தேதி இரவு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த பொதுமக்கள் 3 பேர் திடீரென வாந்தி எடுத்து மயக்கம் போட்டனர்.


இதனையடுத்து அடுத்தடுத்த நாட்களில் மக்கள் மயக்கம் போட்டு கீழே விழுந்த நிலையில், இதுவரை 18 குழந்தைகள் உட்பட 350க்கும் மேற்பட்டோர் இந்த மர்ம நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வித்தியாசமான குரலில் சத்தமிடுவதோடு, கை, கால் வலிப்பும் ஏற்படுவதாகவும் தெரிவிக்கின்றனர். இந்த நோயின் தன்மை குறித்து மருத்துவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.


மக்கள் திடீரென்று மக்கம் போடும் சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், படுக்கைகள் அனைத்தும் நிரம்பி வருகின்றது. ஒரு சிலர் தரையிலும் படுத்திருப்பதை காணமுடிகிறது. இதனிடையே பாதிக்கப்பட்ட மக்களை ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி, மருத்துவமனைக்கு சென்று ஆறுதல் தெரிவித்து வருகின்றார். மேலும், இந்த நோய் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.

Similar News