மீண்டும் மீண்டும் மோடிதான்! "இந்தியா டுடே" கருத்துக்கணிப்பு முடிவுகள் கூறுவது என்ன?

Update: 2022-01-22 11:33 GMT

கொரோனா பெருந்தொற்று பாதிப்புகளை மத்திய அரசு எதிர் கொண்டு வரும் நிலையில்,  இன்னும் 2 ஆண்டுகளில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கையில், தற்போது வெளிவந்துள்ள   "இந்தியா டுடே"  கருத்துக்கணிப்பு முடிவுகள் முக்கியத்துவம்பெறுகிறது. 


2014'ல் பிரதமர் மோடி ஆட்சி பொறுப்பேற்றது முதல், மக்களின் வாழ்வாதாரமும், நாட்டின் வளர்ச்சியும் மேன்மையடைந்துள்ளது. பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி, தூய்மை இந்தியா மற்றும்  டிஜிட்டல் இந்தியா போன்ற எண்ணற்ற  அதிரடி திட்டங்களின் மூலம் நாட்டின் வளர்ச்சிப் பாதையை பிரதமர் மோடியின் அரசு செழுமைப்படுத்தியுள்ளது.


2019'ல் மீண்டும் பிரதமர் மோடி பெரும்பான்மையுடன் பிரதமர் நாற்காலியில் அமர்ந்தார். அதே நல்லாட்சியை தொடர்ந்தார். இருப்பினும் கொரோனா பெருந்தொற்றின் தாக்கத்தால் நாட்டின் பொருளாதாரமும், மக்களின் வாழ்வாதாரமும்  பாதிக்கப்பட்டது. இருப்பினும்  பிற வளர்ந்த வல்லரசு நாடுகளை விட இந்திய பொருளாதாரம் சற்று நிமிர்ந்திருந்ததை   நாம் அறிவோம்.


இந்த சூழ்நிலையில் அடுத்த மாதம் உத்தரப்பிரதேசம், பஞ்சாப்,மணிப்பூர், கோவா மற்றும் உத்தரகாண்ட் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு நடக்கவிருக்கும் தேர்தலில் மோடியின் அலை தேர்தல் முடிவுகளில் தாக்கத்தை ஏற்படுத்துமா? என்று கருத்தில் கொண்டு இக்கருத்துக் கணிப்பு நடத்தப் பட்டதாக கருதலாம்.


கருத்துக்கணிப்பில் முக்கியமாக கூறுவது என்னவென்றால் :

தேர்தல் நடக்கவிருக்கும் 5 மாநிலங்களில் 63 சதவீதம் பேர் மோடி அரசு சிறப்பாக இருக்கிறது என்று ஒப்புக் கொண்டுள்ளனர்.

உத்திரப்பிரதேச மாநிலத்தில் மோடிக்கு 75 சதவீதமும், கோவாவில் 67 சதவீதமும், மணிப்பூரில் 63 சதவீதமும், உத்தரகாண்டில்  59 சதவீதமும் பஞ்சாபில் 39 சதவீதம் பேரும் ஆதரவளித்துள்ளனர்.

தேசிய அளவில் அதிக செல்வாக்கு யாருக்கு?

இந்தியாவில் அதிக செல்வாக்குடன் பிரதமர் மோடி முதல் இடத்திலேயே நீடிக்கிறார். தற்பொழுது  லோக்சபா  தேர்தல் நடத்தப்பட்டால், பாரதிய ஜனதா கட்சிக்கு 296 இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.

கருத்துக்கணிப்பு முடிவுகள் பிரதமர் மோடியின் ஏகபோக மக்கள் செல்வாக்கை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

"இக்கருத்துக் கணிப்பு முடிவுகளில் ஆச்சரியம் தரக்கூடிய அம்சங்கள் ஏதும் இல்லை. மோடிதான் இந்தியாவின் அதிக மக்கள்  செல்வாக்கு மிக்க தலைவர் என்பதில் யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லை" என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

Maalaimalar

Tags:    

Similar News