சபாஷ் இதுவல்லவா திட்டம் ! சாலையில் உயிருக்கு போராடுபவர்களை காப்பாற்றி மருத்துவமனையில் அனுமதிப்பவர்களுக்கு ரூபாய் 5000 வெகுமதி!

Update: 2021-10-06 11:06 GMT

சாலை விபத்தில் உயிருக்கு போராடுபவர்களை காப்பாற்றி மருத்துவமனையில் அனுமதிப்பவர்களுக்கு  ரூபாய் 5000 வெகுமதி அளிக்கப்படும் என்று மத்திய சாலை மற்றும் நெடுஞ்சாலை போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. 

இதுதொடர்பான அறிவிப்பு நேற்று வெளியானது அந்த அறிவிப்பில் : இத்திட்டம் சாலை விபத்துகளில் உயிருக்கு  போராடுபவர்களின் உயிரை காப்பாற்றி   மருத்துவமனையில் சேர்க்கும்  மனித உள்ளம் படைத்தவர்களுக்கு  ரூபாய் 5000 வெகுமதியும் பாராட்டும் பெற்றுத் தருவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

அந்த உன்னத நோக்கில் ஈடுபட்டவர்கள் மருத்துவமனையிலிருந்துதோ, காவல் நிலையத்திலிருந்தோ ஒரு ஒப்புதல் ரசீதைப் பெற்றுக்கொண்டு, மாவட்ட அளவில் அமைக்கப்பட்ட ஒப்புதல் அளிக்கும் குழுவிடம் ஒப்படைக்க வேண்டும். வெகுமதிகளுக்கு ஒப்புதல் அளிக்க மாவட்ட அளவிலான குழு ஒன்று அமைக்கப்படும் அக்குழுவில் டிஸ்ட்ரிக்ட் மேஜிஸ்ட்ரேட், SSP. , தலைமை மருத்துவர், ஹெல்த் ஆபீசர் மற்றும் ஆர்.டி.ஓ. வெகுமதிகளை ஆராய்ந்து ஒப்புதல் அளிப்பார்கள். பின்பு அந்தந்த மாநிலங்கள் அல்லது யூனியன் பிரேதேச போக்குவரத்து  துறையிடம் ஒப்புதல்கள் ஒப்படைக்கப்பெற்று. ரூபாய் ஐயாயிரம் அந்த உன்னத உள்ளமுடைய மனிதர்களிடம் சென்றடையும். என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

இத்  திட்டம் பலரது பாராட்டை பெற்று வருகிறது.

MIRROR NOW NEWS

Tags:    

Similar News