புதிதாக பதவி ஏற்ற மத்திய அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு.. பிரதமர், உள்துறை அமைச்சருக்கு கூடுதல் பொறுப்பு.!

தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்ற நிலையில், அவருக்கு தகவல் ஒலிபரப்பு துறை மற்றும் மீன்வளம் மற்றும் கால்நடைத்துறையும் அவருக்கு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.

Update: 2021-07-08 00:58 GMT

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்டிருக்கும் நிலையில், புதிதா இணை அமைச்சர்கள் மற்றும் கேபினட் அமைச்சர்களாக பதவி ஏற்றுள்ளனர். இதனிடையே, பிரதமர் மோடிக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையை பிரதமர் கூடுதலாக கவனிக்க உள்ளார். அதே போன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூட்டுறவுத்துறையை கூடுதலாக கவனிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்ற நிலையில், அவருக்கு தகவல் ஒலிபரப்பு துறை மற்றும் மீன்வளம் மற்றும் கால்நடைத்துறையும் அவருக்கு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.

சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த ஹர்ஷவர்தன் பதவி விலகியதை தொடர்ந்து, அந்த பதவி மன்சுக் மாண்டவியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. ரசாயனம் மற்றும் உரத்துறையையும் அவர் கூடுதலாக கவனிக்க உள்ளார்.


 



சர்பானந்த சோனாவால் விளையாட்டு, கப்பல் மற்றும் நீர் வழிப்போக்குவரத்து துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு சிவில் விமான போக்குவரத்து துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

அஷ்வினி வைஷ்ணவ் ரயில்வே அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறையும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

பெட்ரோலியத்துறை அமைச்சராக இருந்த தர்மேந்திரா பிரதான், கல்வி மற்றும் திறன் மேம்பாடு துறை அமைச்சராக மாற்றப்பட்டுள்ளார். அவர் வகித்து வந்த பெட்ரோலியத்துறை முன்பு விமானப் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த ஹர்தீப் சிங் பூரிக்கு வழங்கப்பட்டுள்ளது.

விளையாட்டுத்துஐற இணை அமைச்சராக இருந்த கிரண் ரஜிஜூ, சட்டம் மற்றும் நீதித்துறை கேபினட் அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

வர்த்தகம் மற்றும் நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சராக இருந்த பியூஷ் கோயலுக்கு, கூடுதலாக டெக்ஸ்டைல் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

கிஷன் ரெட்டி சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை கேபினட் அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Similar News