இந்தியா - இலங்கை இடையேயான கப்பல் போக்குவரத்து சேவை.. மத்திய அரசின் புதிய முயற்சி..

Update: 2023-10-16 02:41 GMT

நாகப்பட்டினம் காங்கேசன்துறை கப்பல் போக்குவரத்து சேவை இந்தியாவிற்கும், இலங்கைக்கும் இடையே மக்கள் தொடர்பினையும் நல்லுறவுவினையும் வளர்ப்பதாக உள்ளது. தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மற்றும் இலங்கையின் காங்கேசன்துறை இடையே கப்பல் போக்குவரத்தினை மத்திய ஆயுஷ் மற்றும் துறைமுகம் கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிப்பாதைகள் அமைச்சர் சார்பானந்த சொனோவால் தொடங்கி வைத்தார். சேவையை தொடங்கி வைத்த பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், இந்தியா - இலங்கை இடையேயான கப்பல் போக்குவரத்து மூலமாக தமிழ்நாட்டு மக்கள் அதிகம் பயன்பெறுவார்கள்.


கப்பலின் இந்த 3 மணிநேரப் பயணம் மிகுந்த மகிழ்ச்சியினை கொடுக்கும். இந்த கப்பல் பயணம் இரு நாடுகளுக்கிடையேயான மக்கள் தொடர்பினையும் நல்லுறவுவினையும் வளர்ப்பதாக உள்ளது. இந்தப் பயணம், கடலில் உள்ள இயற்கை சூழ்நிலைகள் சாதகமாக இருக்கும் நிலையில் நல்லமுறையில் அமையும். இதன் மூலம் இலங்கை இந்தியா இடையே கலாச்சார உறவு மற்றும் வர்த்தகம் பெருகும் வாய்ப்புள்ளது. குறைந்த செலவிலான இந்தப் பயணத்தின் மூலம் இருநாட்டு மக்களும் விரைவாக பயணிக்க முடியும் எனவும் சுற்றுலாத்துறையும் நன்கு வளர்ச்சியடையும் என்றார்.


இதன் மூலம் இருநாட்டு மக்களும் நல்ல பயனடைவார்கள் என்பதில் எந்த ஐயமும் இல்லை. இதற்காக பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு நன்றி தெரவிக்கிறோம். பிரதமரின் தொலைநோக்கு மற்றும் சிறப்புக் கவனம் மற்றும் ஒத்துழைப்பு ஆகியவற்றால் இந்த கப்பல் போக்குவரத்து சாத்தியமானது என்றார். இதனால் அனைத்து தரப்பு முன்னேற்றங்களும் இரு நாடுகளுக்கும் ஏற்படும் என்றார்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News