இயற்கை அழகும் தெய்வீகத்தன்மை மேற்கொண்டது கோவில்: பிரதமர் குறிப்பிட்டது எந்த கோவிலை?
பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தெய்வீகத் தன்மை மீதும் மற்றும் கடவுளின் மீதும் அதிக நம்பிக்கை கொண்டவர் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அந்த வகையில் தற்போது பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஒரு குறிப்பிட்ட கோவிலை பற்றி தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் கருத்தை பதிவிட்டு இருக்கிறார். உத்தராகண்ட் மாநிலத்தின் குமாவுன் பகுதியில் உள்ள பார்வதி குண்ட் மற்றும் ஜகேஷ்வர் கோயில்களை கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்களாக பிரதமர் நரேந்திர மோடி பரிந்துரைத்துள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் சமூக ஊடக எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது, "உத்தராகண்டில் நீங்கள் செல்ல வேண்டிய இடம் ஒன்று இருந்தால், அது எந்த இடமாக இருக்கும் என்று யாராவது என்னிடம் கேட்டால், மாநிலத்தின் குமாவுன் பகுதியில் உள்ள பார்வதி குண்ட் மற்றும் ஜகேஷ்வர் கோயில்களுக்கு நீங்கள் செல்ல வேண்டும் என்று நான் சொல்வேன். இயற்கை அழகும் தெய்வீகத்தன்மையும் அங்கு உங்களை மெய்சிலிர்க்க வைக்கும்.
நிச்சயமாக, உத்தரகாண்ட் மாநிலம் பார்க்க வேண்டிய பிரபலமான பல பாரம்பரியமான இடங்களைக் கொண்டுள்ளது, மேலும் நான் அடிக்கடி இந்த மாநிலத்திற்கு வருகை தந்துள்ளேன். இதில் கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் ஆகிய புனித இடங்களும் அடங்கும், அவை மிகவும் மறக்கமுடியாத அனுபவங்களாகும். ஆனால், பல ஆண்டுகளுக்குப் பிறகு பார்வதி குண்ட் மற்றும் ஜகேஷ்வர் கோயில்களுக்கு மீண்டும் வருவது சிறப்பு வாய்ந்த தருணமாகும் என்று பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பதிவிட்டு இருக்கிறார்.
Input & Image courtesy: News