பிரதமரின் மக்கள் மருந்தக திட்டம்.. மலிவு விலையில் அனைவருக்கும் மருந்து..

Update: 2023-11-18 04:04 GMT

42 -வது இந்திய சர்வதேச வர்த்தக கண்காட்சியில் பிரதமரின் மக்கள் மருந்தக திட்டம் தொடர்பான அரங்கு இடம்பெற்றுள்ளது. நவம்பர் 14-ந்தேதி தொடங்கி வரும் 27 வரை புதுதில்லி பிரகதி மைதானத்தில் நடைபெறும் 42வது இந்திய சர்வதேச வர்த்தகக் கண்காட்சியில் பிரதமரின் மக்கள் மருந்தக திட்டம் தொடர்பான அரங்கு இடம்பெற்றுள்ளது. அறை எண் 5-ல் அரங்கம் எண் 8 Bயில் மக்கள் மருந்தக திட்டத்தின் செயல்விளக்க அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது, இதில் இத்திட்டத்தின் சிறப்பம்சங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.


தரமான ஜெனரிக் மருந்துகள் அனைவருக்கும் மலிவு விலையில் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில், மத்திய அரசின் ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகத்தின் மருந்துத் துறையால் பிரதமரின் மக்கள் மருந்தகத் திட்டம் தொடங்கப்பட்டு செயல்படுத்தப் படுகிறது. மக்கள் மருந்தக மையங்களை நிறுவி நடத்துவதற்கு தனிப்பட்ட தொழில்முனைவோர் விண்ணப்பித்து உரிமம் பெறும் நடைமுறைகளை அரசு செயல்படுத்துகிறது.


இந்த ஆண்டு அக்டோபர் 31 ஆம் தேதி நிலவரப்படி நாடு முழுவதும் 9998 மக்கள் மருந்தக மையங்கள் செயல்பட்டு வருகின்றன. 1965 வகையான மருந்துகள் மற்றும் 293 அறுவை சிகிச்சை உபகரணங்கள் இந்த மருந்தகங்களில் உள்ளன. பிராண்டட் மருந்துகளை விட 50 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை குறைந்த விலையில் சில்லறை கடைகளில் இவை விற்கப்படுகின்றன.

Input & Image courtesy: News

Tags:    

Similar News