சட்டவிரோதமாக விற்கப்பட்ட கலைப்பொருட்கள்: இந்தியாவிற்கு திரும்பி அனுப்பும் NGA!

இந்திய கலைப்பொருட்களை இந்தியாவிடம் ஒப்படைக்கும் NGA.

Update: 2021-07-30 12:40 GMT

இந்தியாவிலிருந்து பெரும்பாலான கலைப் பொருட்கள் வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமாக ஏற்றுமதி ஆகின்றன. ஆனால் இதற்கு எதிராக இந்திய அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து கொண்டு தான் வருகிறது. இருந்தாலும், ஒரு சில நபர்களின் சுயலாபத்திற்காக சட்டவிரோதமாக இங்கிருந்து கலைப் பொருட்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி ஆகி கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் தற்போது, ஆஸ்திரேலியாவில் உள்ள கலைப்பொருட்கள் இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக கடத்தப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நேஷனல் கேலரி(NGA) என்ற அமைப்பு கண்டுபிடித்து உள்ளது. 


ஒவ்வொரு நாட்டிலும் அந்த நாட்டைச் சேர்ந்த தேசிய கலைப்பொருட்களை பராமரிப்பதற்கும், பாதுகாப்பதற்கும் தனியாக ஒரு அமைப்பு உள்ளது. அது போல் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த தேசிய கலைப்பொருட்களின் அமைப்பு(NGA) தற்பொழுது தன்னுடைய கலை பொருட்களில் பட்டியலில் உள்ள சில புகைப்படங்கள் மற்றும் அரிய வகை சிற்பங்கள் போன்றவை இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக ஆஸ்திரேலியாவிற்கு கொண்டுவரப்பட்டு உள்ளது என்பதை கண்டு பிடித்துள்ளது. 


ஏற்கனவே பல சட்டவிரோதமான கலைப்பொருட்களை இந்திய அரசாங்கத்திடம் NGA-யே ஒப்படைத்துள்ளது. தற்போது இந்திய அரசாங்கத்திடம் இது ஒப்படைக்கும் 4வது முறையாகும் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். NGA-வின் இந்த செயல்கள் இந்திய அரசாங்கத்தின் சார்பாக மற்றும் இந்திய மக்களின் சார்பாகவும் பாராட்டப்படுகிறது. மேலும் இந்த கலைப் பொருட்களை இந்தியாவில் இருந்து கபூர் என்ற வியாபாரி மூலமாகத்தான் ஆஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக கடத்தப்பட்டுள்ளது என்று NGA தற்பொழுது தகவலை தெரிவித்துள்ளது. எனவே கபூர் என்ற வியாபாரியிடம் இருந்து வாங்கப்பட்ட கலைப் பொருட்களில் குறிப்பாக நடனமாடும் நடராஜர் சிலைகள், புத்தர் சிலைகள் மற்றும் ராஜாக்களின் புகைப்படங்கள் போன்றவை இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

Inputs: https://www.abc.net.au/news/2021-07-29/indian-artefacts-repatriated-from-national-gallery-australia/100331278

Image courtesy: ABC News 




Tags:    

Similar News