இந்திய உணர்வு துளி கூட இல்லையா? ISIS பயங்கரவாத அமைப்புக்கு இளைஞர்களை சப்பளை செய்த முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ-வின் மருமகள்..!
NIA chargesheet names ex-Congress MLA’s kin for recruiting youths for ISIS, terror funding;
ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு ஆள் சேர்த்த வழக்கில் தேசிய புலனாய்வு முகமை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. அதில் கர்நாடக முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ, மறைந்த பிஎம் இடினப்பாவின் உறவினர்கள் மற்றும் 7 பேர் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
தீப்தி மார்லா, அம்மார் அப்துல் ரஹிமான் உள்ளிட்ட 8 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தீப்தி மார்லாவின் கணவர் அனஸ் அப்துல் ரஹிமான், பி.எம்.பாஷாவின் மகன் ஆவார். இவரது தந்தை இடினாப்பா முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ ஆவார்.
குற்றம் சாட்டப்பட்ட எட்டு பேரும் ஐஎஸ்ஐஎஸ் உடன் தொடர்புடையவர்கள் என்றும், தீவிரவாதிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்தல், பயங்கரவாத நிதிகளை ஒழுங்கமைத்தல் மற்றும் ஐஎஸ்ஐஎஸ் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிக்கு ஹிஜ்ரத் செய்வதற்கு பல்வேறு வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்துள்ளனர். மேலும், முஸ்லிம் இளைஞர்களை சீர்படுத்துதல் போன்றவற்றில் ஈடுபட்டுள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
முன்னதாக, பிரபல கன்னட எழுத்தாளரும், உல்லால் முன்னாள் எம்எல்ஏவுமான மறைந்த பி.எம்.இடினப்பாவின் மகன் பி.எம்.பாஷாவின் வீட்டில் ஜனவரி 3ஆம் தேதி தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) சோதனை நடத்தியது.
பாஷாவின் மருமகள் முண்டாடிகுட்டு சதானந்த மர்லா தீப்தி மர்லா என்ற மரியம் பயங்கரவாத அமைப்பான ஐஎஸ்ஐஎஸ் உடன் தொடர்புடையதாகக் கூறி காவலில் வைக்கப்பட்டார். மார்ச் 2021 இல் பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டதாக என்ஐஏ தெரிவித்துள்ளது. இதுவரை, நிதி திரட்டியதாக, தீவிரவாத அமைப்பான ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர மக்களை தூண்டியதாக 11 பேரை என்ஐஏ கைது செய்துள்ளது.