கொரோனா அதிகரிப்பு! பெங்களூருவில் இரவுநேர ஊரங்கு அமல்படுத்த மாநகராட்சி பரிந்துரை!

கொரோனா வைரஸ் பெருந்தொற்று அதிகரித்து வருவதால் பொதுமக்களின் நலன் கருதி பெங்களூருவில் மீண்டும் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்த மாநில அரசுக்கு மாநகராட்சி பரிந்துரை செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

Update: 2021-12-06 02:07 GMT

கொரோனா வைரஸ் பெருந்தொற்று அதிகரித்து வருவதால் பொதுமக்களின் நலன் கருதி பெங்களூருவில் மீண்டும் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்த மாநில அரசுக்கு மாநகராட்சி பரிந்துரை செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

இந்தியாவிலேயே முதன் முறையாக கர்நாடகத்தில் மிகவும் அபாயகரமான வைரஸாக கருதப்படும் ஒமைக்ரான் தொற்று பரவியுள்ளது அனைத்து தரப்பு மக்களையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அதாவது ஒரு டாக்டர் உட்பட 2 பேருக்கு அந்த வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களில் 5 பேருக்கு வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் சுகாதாரத்துறையை அதிர்ச்சியடைய செய்துள்ளது. அது மட்டுமின்றி பெங்களூரு நகரத்தில் தினமும் கொரோனா வைரஸ் தொற்று அதிகரிக்கவும் தொடங்கியுள்ளது. தினந்தோறும் சுமார் 160 முதல் 200 பேர் வரைக்கும் தொற்றால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர். தினந்தோறும் அதிகரிக்க தொடங்கும் தொற்றால் சுகாதாரத்துறையினருக்கு சவாலாக அமையும் என கூறப்படுகிறது.

இந்நிலையில், பெங்களூரு நகரில் மீண்டும் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தாலாமா என்று மாநில அரசுக்கு மாநகராட்சி பரிந்து செய்யலாமா என்று ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது. விரைவில் அரசுக்கு பரிந்துரை செய்ய வாய்ப்பு இருப்பதாக மாநகராட்சி அதிகாரிகள் கூறியுள்ளனர். அது போன்று பரிந்துரை செய்யப்படும் பட்சத்தில் நாட்டிலேயே மீண்டும் பெங்களூரு நகரத்தில்தான் இரவு நேர ஊரடங்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Source, Image Courtesy: Daily Thanthi


Tags:    

Similar News