வெளிநாடுகளில் "புதிய வகை வைரஸ்" பரவல் அதிகரிப்பு: இந்தியாவில் பாதிப்பு இல்லை என மத்திய அரசு தகவல்!

Update: 2021-11-26 13:25 GMT

தென்னாப்பிரிக்காவில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பி.1.1.529 என அடையாளம் காணப்பட்ட புதிய வகை உருமாற்ற கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் அறிவித்தனர். இதன் காரணமாக அந்நாட்டில் இருந்து பயணிகள் வருவதற்கு ஜெர்மனி, இத்தாலி உள்ளிட்ட நாடுகள் தடை விதித்துள்ளது.

இதே போன்று மத்திய அரசும் தென்னாப்பிரிக்கா மற்றும் மற்ற நாடுகளில் இருந்து இந்தியா வருபவர்களை தீவிர பரிசோதனைக்கு பின்னரே நாட்டில் அனுமதித்து வருகிறது.

இந்நிலையில், இது பற்றி ஏ.என்.ஐ. வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: இந்தியாவில் தற்போதுவரை புதிய வகை உருமாற்ற கொரோனா வைரஸ் எதுவும் கண்டுப்பிடிக்கப்படவில்லை என்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சக அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனால் இந்திய மக்கள் யாரும் பயப்பட தேவையில்லை என கூறப்பட்டுள்ளது.

Source, Image Courtesy: Daily Thanthi


Tags:    

Similar News