இனி ஏமாற்றி எந்த திருமணமும் நடக்கக்கூடாது - அசாம் மாநில அரசு கொண்டுவரப்போகும் அசத்தல் சட்டம்!

இனி ஏமாற்றி எந்த திருமணமும் நடக்கக்கூடாது - அசாம் மாநில அரசு கொண்டுவரப்போகும் அசத்தல் சட்டம்!

Update: 2020-12-01 18:53 GMT
அசாம் மாநில அரசாங்கம் மணமகனும், மணமகளும் தங்கள் மதத்தையும் வருமானத்தையும் திருமணத்திற்கு ஒரு மாதத்திற்கு முன்பு அதிகாரப்பூர்வமாக  ஆவணங்களில் அறிவிக்க வேண்டிய புதிய சட்டத்தை உருவாக்கத் தொடங்கியுள்ளது. அஸ்ஸாம் அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா திங்களன்று இந்த சட்டம் குறித்த அறிவிப்பை வெளியிட்டு, இது  "பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும்" என்று கூறினார்.

நாங்கள் சட்டத்தை உருவாக்கத் தொடங்கியுள்ளோம்

"கணவன்-மனைவி இடையே வெளிப்படைத்தன்மை இல்லாவிட்டால் ஒருவர் திருமணம் செய்து கொள்ளக்கூடாது என சர்மா குவஹாத்தியில் கூறினார்.

எங்கள் யோசனை 'லவ் ஜிஹாத்' என்று அழைக்கப்படுபவை அல்ல. உங்கள் அடையாளம், வேலை அல்லது வருமானத்தை நீங்கள் மறைக்கக் கூடாது என்பதே எனது எண்ணம். அசாம் மாநில அரசு  எந்த மதத்திற்கும் எதிரானதாக ஒன்றைச் செய்யப்போவதில்லை. திருமணத்தில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறது. அதற்காக நாங்கள் சட்டத்தை உருவாக்கத் தொடங்கினோம். இது எல்லா திருமணங்களுக்கும் கட்டாயமாக இருக்கும். ஒரு மனைவியிடம் ஒரு கணவர் கொடுக்கும் நம்பிக்கையின் சார்பு வடிவமாக இது  இருக்கும். இது மத்தியப் பிரதேசம் மற்றும் உத்தரபிரதேச சட்டத்துடன் பொருந்தாது. இது பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் "என்று ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறினார்.

இது அடுத்த ஆண்டு அசாமில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலுக்கு முன் அமலுக்கு வரலாம் என எதிர் பார்க்கப்படுகிறது. ஹரியானா, கர்நாடகா மற்றும் பீகார் உள்ளிட்ட பல பாஜக ஆளும் மாநிலங்களில்  "லவ் ஜிஹாத்" எதிராக ஒரு சட்டத்தை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இதற்கிடையில், கடந்த வாரம், உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அமைச்சரவை இச்சட்டத்தை நிறைவேற்றிய சில நாட்களுக்குப் பிறகு, ஆளுநர் ஆனந்திபென் படேல் 'மதத்தை சட்டவிரோதமாக மாற்றுவதற்கான சட்டத்தை அறிவித்தார்.

Similar News