கொரோனா நோயாளி வீடுகள் முன் எச்சரிக்கை நோட்டீஸ் ஓட்ட தேவையில்லை: உத்தரவுடன் மாற்று வழி சொன்ன கோர்ட்.!

கொரோனா நோயாளி வீடுகள் முன் எச்சரிக்கை நோட்டீஸ் ஓட்ட தேவையில்லை: உத்தரவுடன் மாற்று வழி சொன்ன கோர்ட்.!

Update: 2020-12-10 12:13 GMT

கொரோனா நோயாளியின் வீட்டிற்கு வெளியே தொற்று பாதிக்கப்பட்ட நோயாளிகளின் வீடுகளுக்கு வெளியே தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள் என்ற சுவரொட்டிகளை ஒட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு மாநில அரசாங்கங்களுக்கு எதிரான வழக்குகளை உச்ச நீதிமன்றம் விசாரணை செய்தது. இந்த வழக்கை த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அசோக் பூஷண், ஆர் சுபாஷ் ரெட்டி மற்றும் எம்.ஆர்.ஷா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது.

மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தா, இந்த நடவடிக்கையை மத்திய அரசு பரிந்துரைக்கவில்லை என்றாலும், நோயாளிகளுடன் மற்றவர்கள் கவனக்குறைவாக தொடர்பு கொள்வதைத் தடுப்பதற்கு சில மாநில அரசுகள் தாங்களாகவே இந்த நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன என்றார்.

மேலும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் வீடுகளில் சுவரொட்டிகள் அல்லது பிற அடையாளங்களை ஒட்டுவது தொடர்பான எந்த அறிவுறுத்தல்களும் வழிகாட்டுதலும் மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களில் இல்லை” என்று மத்திய அரசு உயர் நீதிமன்றத்தில் அளித்த பிரமாணப்பத்திரத்தில் தெரிவித்துள்ளது.

இந்த வழக்கு தொடர்பான விசாரணையின்போது, கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளில் சுவரொட்டிகள் மற்றும் நோட்டீஸ் ஒட்டுவதால் அந்த வீட்டில் குடியிருப்பவர்கள் மற்றவர்களால் தீண்டத்தகாதவர்கள் என்று கருதப்படுவார்கள் என்று உச்ச நீதிமன்றம் எச்சரித்தது.

இந்நிலையில், கொரோனா நோயாளியின் வீட்டிற்கு வெளியே அறிவிப்பு அல்லது நோட்டீஸ் எதுவும் ஒட்டப்படக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் தனது உததரவில் கூறியுள்ளது. கொரோனா நோயாளியின் வீடுகளுக்கு வெளியே நோட்டீஸ் அல்லது அறிவிப்புகளை ஒட்டக்கூடாது என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளதுடன், பேரழிவு மேலாண்மைச் சட்டத்தின் கீழ், குறிப்பிட்ட விதிமுறைகளின் கீழ் மட்டுமே நோட்டீஸ் ஒட்டப்பட வேண்டும் என விதிமுறை இருப்பதாகவும் கூறியுள்ளது.
 

Similar News