வeன்முறையிலிருந்து வளர்ச்சி.. சோதனைகளில் இருந்து சாதனை.. மாஸ் காட்டும் மோடி அரசு!
வன்முறை காடாக இருந்த வடகிழக்கு மாநிலங்கள் இன்று வளர்ச்சி மாநிலங்களாக உருவெடுத்து இருக்கிறது.
ஒரு காலத்தில் தடைகள், வன்முறைகளுக்கு பெயர் பெற்ற வடகிழக்கு மாநிலங்கள் தற்போது அதன் வளர்ச்சிக்காகப் பெயர் பெற்றுள்ளன. குறிப்பாக வன்முறைக்குப் பெயர் பெற்ற வடகிழக்கு மாநிலங்கள் தற்போது அதன் முன்னேற்றங்கள் மற்றும் அனைத்துத் துறைகளிலும் ஏற்பட்டுள்ள வளர்ச்சியால் அறியப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
நாகாலாந்து, அஸ்ஸாம் மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் ஏ.எஃப்.பி.எஸ்.ஏ-வின் கீழ் அறிவிக்கப்பட்ட பதற்றம் மிகுந்த பகுதிகளைக் குறைக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு மீண்டும் முடிவு செய்துள்ளதாக மத்திய அமைச்சர் அமித் ஷா வெளியிட்ட ட்விட்டர் பதிவுக்கு பிரதமர் பதிலளித்துள்ளார். வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சி தற்பொழுது பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசாங்கம் உறுதி செய்து இருக்கிறது. மேலும் பல்வேறு வடகிழக்கு பகுதியை சேர்ந்த மக்கள் பயன்பெறும் வகையில் நல்ல திட்டங்களையும் மத்திய அரசு கொண்டு வந்து இருக்கிறது.
வடகிழக்கு இந்தியாவின் பாதுகாப்பு நிலைமையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் அமித் ஷா குறிப்பிட்டிருந்தார். மத்திய அமைச்சர் அமித் ஷாவின் ட்விட்டர் பதிவுக்கு பதிலளித்த பிரதமர், "வடகிழக்கு மாநிலங்கள் அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சி கண்டுள்ளன. ஒரு காலத்தில் தடைகள் மற்றும் வன்முறைகளுக்கு பெயர் பெற்ற பகுதி, இப்போது அதன் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் பெயர் பெற்றுள்ளது" எனப் பதிவிட்டுள்ளார்.
Input & Image courtesy: News