அமைதிக்கான நோபல் பரிசு பிரதமர் மோடிக்கு வழங்க வேண்டும் - இந்தியாவிடம் இருந்து கற்றுக் கொள்ளும் வெளிநாடுகள்!
அமைதிக்கான நோபல் பரிசு பெற தகுதியுடையவர் பிரதமர் நரேந்திர மோடி தான் என்று புகழாரம் சூட்டிய பரிசு குழுவின் துணைத் தலைவர்.
2014 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இந்தியாவின் பிரதமராக வலம் வரத் தொடங்கினார்தொடங்கினார்கள். குறிப்பாக பிரதமர் ஆட்சிக் காலத்தில் கொண்டு வந்த பல்வேறு நலத்திட்ட உதவிகள் மக்களை அடுத்த கட்ட நகர்விற்கு எடுத்துச் சென்று இருக்கிறது. இந்தியாவில் மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் பேச்சிற்கு பல்வேறு ரசிகர்கள் இருக்கிறார்கள். அந்த வகையில் நோபல் பரிசு வழங்கும் குழுவின் துணைத் தலைவர் ஆஸ்லே என்பவர் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு ரசிகராக மாறி இருக்கிறார்.
குறிப்பாக அமைதிக்கான நோபல் பரிசு பிரதமர் மோடிக்கு வழங்க வேண்டும் என்று தன்னுடைய கோரிக்கையை முன்வைத்து இருக்கிறார். உக்ரைன் - ரஷ்யா இடையே போர் உச்சத்தில் இருக்கும் சமயத்தில் இரு நாடுகளுக்கு இடையான அமைதியை ஏற்படுத்த உலக நாடுகள் இந்தியாவிடம் கேட்டுக் கொண்டது. எனினும் இரு நாடுகள் முழுமையான ஒத்துழைப்பு தர வேண்டும் பிரதமர் மோடி அவர்கள் நினைத்தால் போரை உடனடியாக முடிவுக்கு கொண்டு வர முடியும் என்று உலக நாடுகள் இந்தியாவிடம் முறையிட்டன.
அந்த வகையில் இரண்டு நாட்டு அதிபர்களிடமும் போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என பிரதமர் மோடி அவர்கள் வேண்டுகோள் விடுத்து இருந்தார். இந்த நிலையில் அமைதிக்கான நோபல் பரிசு வெல்வதற்கு தகுதியானவர் பிரதமர் மோடி என பரிசு குழுவின் துணைத் தலைவர் கருத்து தெரிவித்து இருக்கிறார். ஏனெனில் அமைதிக்கான நோபல் பரிசுக்கு மிகப்பெரிய போட்டியாளராக பிரதமர் இருக்கிறார். உலக நாடுகள் இந்தியாவிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டு இருக்கிறது இந்தியாவின் கொள்கைகளால் பிரதமரின் கொள்கைகளால் இந்தியா தற்பொழுது பணக்கார நாடாக மாற்றி இருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.
Input & Image courtesy: Mediyaan News