வரலாற்றில் இல்லாத அளவிற்கு மழை ! ஒடிசாவில் கடும் வெள்ளப்பெருக்கு !
ஒடிசாவில் தொடர்ந்து கனமழை நீடித்து வருவதால், பெரும்பாலான இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
ஒடிசாவில் தொடர்ந்து கனமழை நீடித்து வருவதால், பெரும்பாலான இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
புரியில் 87 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை பெய்து உள்ளது. ஒடிசாவில் முதலமைச்சர் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம் ஆட்சி நடைபெற்று வருகிறது. வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஒடிசாவின் பத்ராக் மாவட்டத்தில் கரையை கடந்து, வடக்கு ஒடிசாவை நோக்கி நகர்ந்து வருகிறது. இதன் காரணமாக மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை நீடித்து வருகிறது.
தலைநகர் புவனேஸ்வரில் கடந்த 24 மணி நேரத்தில் 19.5 செ.மீ., மழை பாதிவாகியுள்ளது. இது கடந்த 63 ஆண்டுகளில் இல்லாத அளவு, சாலைகள் மற்றும் வீடுகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும், மிகவும் பிரசித்தி பெற்ற ஜெகன்நாதர் கோயில் அமைந்துள்ள புரி மாவட்டத்தில் 34.1 செ.மீ, மழை பதிவாகியுள்ளது. இந்த மழை கடந்த 87 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அதிகமான மழை பெய்துள்ளது. தொடர்ந்து கனமழை நீடித்து வருவதால் சுமார் 13 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Source, Image Courtesy: Dinamalar