இந்தியாவில் வேகமாக பரவும் ஒமைக்ரான்: மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம்!

தென்னாப்பிரிக்காவில் முதன் முதலாக கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் தற்போது வேகமாக உலகளவில் பரவி வருகிறது. அந்த வைரஸ் தொற்று இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை.

Update: 2021-12-21 15:12 GMT

தென்னாப்பிரிக்காவில் முதன் முதலாக கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் தற்போது வேகமாக உலகளவில் பரவி வருகிறது. அந்த வைரஸ் தொற்று இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை.

இந்தியாவில் கடந்த 2ம் தேதி கர்நாடக மாநிலத்தில் 2 பேருக்கு ஒமைக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டது. அதனை தொடர்ந்து இந்தியாவில் சுமார் 13 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. இதன் பின்னர் படிப்படியாக உயர்ந்து 202 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களுக்கு மீண்டும் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்க முடிவு செய்துள்ளது. 


இந்நிலையில், இந்தியாவில் மிக வேகமாக பரவத் தொடங்கியிருக்கும் நிலையில், மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. அந்த கடிதத்தில் ஒமைக்ரான் வைரஸ் டெல்டா வகையை விட மூன்று மடங்கு வேகமாக பரவும் தன்மை உடையது. இதன் காரணமாக மக்கள் அதிகளவு கூடும் இடங்களுக்கு தடை விதிக்கவும் மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Source, Image Courtesy: Daily Thanthi

Tags:    

Similar News