ஜனநாயகத்தை வலுப்படுத்துகிறது நமது பாரம்பரியம்: பிரதமர் மோடி பேச்சு!

Update: 2022-04-15 02:24 GMT

சுதந்திரத்திற்குப் பின்னர் அமைந்த அரசுகள் ஒன்று அல்லது இரண்டு விதிவிலக்குகளைத் தவிர்த்து நாட்டை உயரத்திற்கு அழைத்து செல்வதில் பெரும் பங்களித்துள்ளது. இதனால் ஜனநாயகத்தை வலுப்படுத்தும் பெருமைமிக்க பாரம்பரியத்தை நாம் கொண்டுள்ளோம் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

டெல்லியில் முன்னாள் பிரதமர்கள் பற்றிய விபரங்கள் அடங்கிய அருங்காட்சியகத்தை மத்திய அரசு அமைத்தது. இதில் 14 முன்னாள் பிரதமர்களின் படங்கள், குறிப்புகள் அவர்களின் சாதனைகள் உட்பட அனைத்தும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்து அருங்காட்சியகத்தை பார்வையிட்டார். அதற்கான டிக்கெட்டை பணம் கொடுத்து வாங்கினார்.

இதில் பிரதமர் மோடி பேசும்போது: நமது வலுவான ஜனநாயக பாரம்பரியத்தை கொண்டுள்ளோம். ஒவ்வொரு சகாப்தத்திலும், ஒவ்வொரு தலைமுறையிலும் ஜனநாயகத்தை மிகவும் நவீனமானதாகவும், அதிகாரம் பெற்றதாகவும் மாற்றுகின்ற முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், ஒன்று அல்லது இரண்டு விதிவிலக்குகளைத் தவிர்த்து, ஜனநாயகத்தை வலுப்படுத்தும் பெருமைமிக்க பாரம்பரியத்தை நாம் கொண்டுள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.

Source, Image Courtesy: Dinamalar

Tags:    

Similar News