தொழிலாளர்களின் பாதுகாப்பை வலுப்படுத்தும் முடிவு: 8 புதிய மருத்துவ மனைகளுக்கு ஒப்புதல்!

8 இடங்களில் புதிய மருத்துவ மனைகள் அமைக்கப் படவுள்ளதாக மத்திய அமைச்சர் அறிவிப்பு.;

Update: 2023-02-22 00:32 GMT

மத்திய தொழிலாளர், வேலைவாய்ப்பு, சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் தொழிலாளர் காப்பீட்டுக் கழகத்தின் (இ.எஸ்.ஐ.சி) 190-வது கூட்டத்துக்கு தலைமை தாங்கினார். மத்திய தொழிலாளர், வேலைவாய்ப்பு, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை இணையமைச்சர் ராமேஸ்வர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டார். இக்கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையின் அடிப்படையில், தொழிலாளர்களின் சமூகப் பாதுகாப்பை வலுப்படுத்தும் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.


தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு ESI கழகம், கர்நாடகா, தெலுங்கானா, ராஜஸ்தான், ஒடிசா ஆகிய இடங்களில் 100 படுக்கைகளுடன் மருத்துவமனைகளை அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். ஆந்திராவில் 30 படுக்கைகளைக் கொண்ட மருத்துவமனையும், உத்தரப் பிரதேசத்தில் 350 படுக்கைகளைக் கொண்ட மருத்துவமனையும் அமைக்கப்படவுள்ளதாக அவர் கூறினார்.


இது தவிர சில மருத்துவமனைகளை தரம் உயர்த்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். புதிதாக அமைக்கப்படவுள்ள மருத்துவமனைகள் தொழிலாளர் காப்பீட்டுக் கழகத்தால் நேரடியாக நடத்தப்படும் என்றும், தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் சிறந்த மருத்துவ வசதிகளை இந்த மருத்துவமனையில் பெறலாம் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News