பிரதமரின் விரைவுசக்தித் திட்டம்: முதன் முறையாக கோவாவில் தொடங்கியது!

பிரதமரின் விரைவுசக்தி பிராந்திய பயிலரங்கம் முதன் முறையாக கோவாவில் நடைபெற்றது.

Update: 2023-02-22 00:34 GMT

மேற்கு மற்றும் மத்திய மண்டலத்திற்கான பிரதமரின் விரைவுசக்தி பிராந்திய பயிலரங்கம் முதன் முறையாக கோவாவில் இன்று நடைபெற்றது. இந்தப் பயிலரங்கத்தில், தேசிய பெருந் திட்டத்தை மத்திய அமைச்சகங்கள் மற்றும் மாநில அரசுத் துறைகள் பின்பற்றுவது தொடர்பான நடவடிக்கைகள் குறித்து விரிவான விவாதங்கள் நடைபெற்றது. தொழில்துறை மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத்துறை தனிச் செயலாளர் சுமித்தா துவாரா இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.


இந்தப் பயிலரங்கத்தில் பேசிய தொழில்துறை மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத்துறைச் செயலாளர் திரு அனுராக் ஜெயின், “பிரதமரின் விரைவுசக்தித் திட்டத்தின் மூலம் தனியார் முதலீடுகள், உற்பத்தி, வேலைவாய்ப்பு மற்றும் வளர்ச்சி போன்றவற்றில் மேம்பாடு அடையும் என்றார். விரைவுசக்தி தேசிய பெருந்திட்டம் தொடங்கப்பட்டிருப்பதன் நோக்கம், தற்சார்பு இந்தியா என்ற இலக்கை அடைவதற்கான பாதையை வலுப்படுத்துவதற்காகத்தான் என்று குறிப்பிட்டார்.


பொதுமக்களுக்கு ஏற்படும் பல்வேறு பிரச்சினைகளுக்கு அடிப்படைக் காரணம் பெரிய அளவில் திட்டமிடுதலுக்கும், சிறிய அளவில் நடைமுறைப்படுத்துதலுக்கும் இடையே உள்ள தொடர்பின்மையே காரணமாகும். விரைவுசக்தி தேசிய பெருந்திட்டம் இந்தப் பிரச்சினையை சரி செய்யும். இதன் மூலம் ஒருங்கிணைந்த திட்டமிடல், நடைமுறைப்படுத்துதல், உள்கட்டமைப்பு கண்காணிப்பு, சமூக-பொருளாதாரத்துறையின் திட்டங்கள் போன்றவைகள் சிறந்த முறையில் செயல்வடிவம் பெறும் என்றார்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News