இன்னும் ஏன் அது நடக்கல? பிரதமரின் நேரடி கண்காணிப்பில் வந்த 40 மாவட்ட ஆட்சியர்கள்! சாட்டையை சுழற்றும் அதிரடி நடவடிக்கை!

PM holds review meeting with districts having low vaccination coverage

Update: 2021-11-06 01:00 GMT

கிளாஸ்கோ பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பிய கையோடு பிரதமர் மோடி உடனடியாக குறைந்த அளவில் தடுப்பூசி செலுத்திய மாவட்ட அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டத்தை மேற்கொண்டார். 

முதல் தவணை தடுப்பூசி 50 சதவீதத்திற்கும் குறைவாக செலுத்தியுள்ள மாவட்டங்கள், இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்துவதில் தொய்வு காணப்படும் மாவட்டங்கள் இதில் அடங்கும். குறைந்த அளவு தடுப்பூசி செலுத்தியுள்ள ஜார்க்கண்ட், மணிப்பூர், நாகாலாந்து, அருணாச்சலப்பிரதேசம், மகாராஷ்டிரா, மேகாலயா மற்றும் இதர மாநிலங்களைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட மாவட்டங்களின் ஆட்சியர்களுடன் பிரதமர் கலந்துரையாடினார்.

மாவட்டங்கள் எதிர்கொண்டு வரும் பிரச்சனைகளை விளக்கிய மாவட்ட ஆட்சியர்கள், அதுவே குறைந்த அளவு தடுப்பூசி செலுத்தப்பட்டதற்கு காரணம் என்று தெரிவித்தனர். வதந்திகள் காரணமாக தடுப்பூசி செலுத்துவதில் ஏற்படும் தயக்கம், போக்குவரத்துக்கு கடினமான மலைப்பகுதி, கடந்த சில மாதங்களாக நிலவும் தட்பவெப்ப நிலையால் ஏற்பட்டுள்ள சவால்கள் போன்ற விஷயங்களை அவர்கள் சுட்டிக்காட்டினர்.

இத்தகைய சவால்களை எதிர்கொள்ள தற்போது வரை எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை அவர்கள் விளக்கினர். தடுப்பூசி செலுத்துவதை அதிகரிக்க தாங்கள் மேற்கொண்டுள்ள சிறந்த நடைமுறைகளையும் அவர்கள் தெரிவித்தனர்.

இந்த கலந்துரையாடலின் போது பிரதமர் தடுப்பூசி செலுத்துவதில் காணப்படும் தயக்கம், உள்ளூர் பிரச்சனைகள் ஆகியவை குறித்து விவாதித்தார். இந்த மாவட்டங்களில் 100 சதவீத தடுப்பூசி செலுத்தப்படுவதை உறுதி செய்வதற்கான விரிவான நடவடிக்கைகள் பற்றி அவர் விளக்கினார்.

மத மற்றும் சமுதாய தலைவர்கள் மூலம் தடுப்பூசி செலுத்தும் இயக்கத்தை பரப்புமாறு அவர் கேட்டுக் கொண்டார். இந்தாண்டு இறுதிக்குள் நாட்டில் தடுப்பூசி செலுத்துவதை விரிவாக்கி, வரும் புத்தாண்டை புதுப்பிக்கப்பட்ட தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ளுமாறு அனைத்து அதிகாரிகளையும் அவர் வலியுறுத்தினார்.


Tags:    

Similar News