பிரதான் மந்திரி கிஷான் யோஜனா திட்டம்: விவசாய பயனாளிகளின் எண்ணிக்கை 10.45 கோடி!

பிரதமரின் விவசாயிகளுக்கான மிகப்பெரிய திட்டமான கிஷான் திட்டத்தின் பயனாளிகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

Update: 2023-02-09 01:53 GMT

பிரதமரின் விவசாயி வருவாய் ஆதரவு நிதி நிதித் திட்டத்தின் கீழ் கடந்த டிசம்பர் 2018- மார்ச் 2019 வரையில் 3.16 கோடி பயனாளிகளின் எண்ணிக்கை ஏப்ரல் 2022-ஜுலை 2022 வரையில் 10.45 கோடியாக உயர்ந்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்வதன் விளைவாக பயனாளிகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. இத்திட்டம் தொடர்பான நடவடிக்கைகளைத் தெரிந்து கொள்வதற்கென ஒரு வலைத்தளம் உருவாக்கப்ட்டுள்ளது.


மேலும் இது தொடர்பாக சிறப்பு மொபைல் செயலியும் அறிமுகப்படுத்த்தபட்டுள்ளது. பொது சேவை மையங்கள் மூலம் விவசாயிகள், இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்வதற்கு உதவிகள் மேற்கொள்ளப்படும். கிராம, மாவட்ட மற்றும் மாநில அளவிலான தொடர்பு அதிகாரிகளை மாநில அரசு நியமித்துள்ளது. பிரதம மந்திரி அறிமுகப்படுத்தி இருக்கின்ற PM கிஷான் திட்டத்தின் மூலமாக பல்வேறு விவசாயிகள் தற்பொழுது பயன் அடைந்து இருக்கிறார்கள்.


அனைத்து தகுதியான விவசாயிகளின் குடும்பங்களும் இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படுவதற்கான நடவடிக்கைகளை விரைவுப்படுத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று மத்திய வேளாண்துறை அமைச்சர் திரு நரேந்திர சிங் டோமர் மக்களவையில் இன்று எழுத்துப்பூர்வமான பதிலளித்துள்ளார்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News