100 கோடி தடுப்பூசி என்பது வெறும் எண் மட்டும் இல்லை.. புதிய அத்தியாயத்தின் தொடக்கம்: பிரதமர் மோடி உரை!

குடிமக்களின் அனைவரின் கூட்டு முயற்சியால்தான் 100 கோடி கொரோனா தடுப்பூசி சாதனை என்பது சாத்தியமானது என்று பிரதமர் நரேந்திர மோடி தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.

Update: 2021-10-22 05:50 GMT

குடிமக்களின் அனைவரின் கூட்டு முயற்சியால்தான் 100 கோடி கொரோனா தடுப்பூசி சாதனை என்பது சாத்தியமானது என்று பிரதமர் நரேந்திர மோடி தனது உரையில் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் 100 கோடி கொரோனா தடுப்பூசி போடப்பட்டிருந்த நிலையில் நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி இன்று உரையாற்றினார். இதன் பின்னர் அவர் பேசியதாவது: நேற்று நமது நாடு மிகப்பெரிய சாதனையை படைத்து புதிய சரித்திரத்தை படைத்துள்ளோம். 257 நாட்களில் 100 கோடி கொரோனா தடுப்பூசியை செலுத்தி இந்தியா கடினமான இலக்கை எட்டியுள்ளது. 100 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ் என்பது புதிய சாதனையின் தொடக்கமாக இருப்பதாக பெருமிதத்துடன் கூறினார்.


மேலும், இந்தியாவின் தடுப்பூசி திட்டம் பற்றி உலக அளவில் ஒப்பிட்டு பார்க்கப்படுகிறது. புதிய இந்தியாவின் விடா முயற்சி, நம்பிக்கைக்கு கிடைத்த மாபெறும் வெற்றிதான் இந்த பரிசு. மிகவும் கடுமையான சோதனைக்கு பின்னர் இந்தியாவுக்கு கிடைத்த வாய்ப்பாக மாற்றப்பட்டுள்ளது. உலக அளவில் தடுப்பூசிகள் போடும்போது இந்தியா பற்றி பல்வேறு கேள்விகள் எழுந்தது. பெரும் மக்கள் தொகையை கொண்ட இந்தியா தடுப்பூசிகளை எப்படி பெறுவார்கள். எப்படி போடுவார்கள் என்ற கேள்விகளை முன்வைத்தனர். மேலும் தடுப்பூசி போடும்போது விஜபிக்களுக்கு முன்னுரிமை என்பதை தவிர்த்தோம்.


பொதுமக்களுக்கு இக்கட்டான சூழலில் நம்பிக்கை அளிப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டோம். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசி திட்டம் முற்றிலும் அறிவியல் அடிப்படையில் வகுக்கப்பட்டது. கடைக்கோடியில் உள்ள குடிமக்களுக்கும் தடுப்பூசி போடுவதை மத்திய அரசு உறுதி செய்தது. கொரோனா சமயத்தில் விளக்கு ஏற்றுதல், கை தட்டுதல் உள்ளிட்டவைகளை செய்து மருத்துவத்துறையை நாம் உற்சாகப்படுத்தினோம் என்பதை இந்நேரத்தில் பெருமையுடன் கூறி கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Source,Image Courtesy:ANI


Tags:    

Similar News