Quad உச்சி மாநாடு ! நாளை பிரதமர் மோடி அமெரிக்கா புறப்படுகிறார் !
அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் ஐநா கூட்டம் மற்றும் ‘க்வாட்’ கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் கூட்டம் நடைபெறுகிறது.
அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் ஐநா கூட்டம் மற்றும் 'க்வாட்' கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் கூட்டம் நடைபெறுகிறது.
அந்த கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொள்ள இருப்பதால் நாளை அமெரிக்கா புறப்பட்டு செல்கிறார். இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் 'க்வாட்' கூட்டமைப்பில் இணைந்துள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக உலகத்தையே வாட்டி வதைக்கும் கொரோனா பெருந்தொற்று குறைந்துள்ள நிலையில், அமெரிக்காவில் உள்ள வெள்ளை மாளிகையில் முதன் முறையாக வருகின்ற 24ம் தேதி 'க்வாட்' தலைவர்களின் கூட்டம் நடைபெறுகிறது.
இந்த கூட்டம் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தலைமையில் நடைபெறுகிறது. இதில் இந்திய பிரதமர் மோடி, ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மோரிஸன் மற்றும் ஜப்பான் பிரதமர் யோஷிஹிடே சுகா ஆகியோர்கள் பங்கேற்கின்றனர்.
இக்கூட்டத்தில் 'க்வாட்' கூட்டமைப்பில் உள்ள நாடுகள் தங்களின் உறவுகளை வலுப்படுத்துவது மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு, பெருகி வரும் தொற்றில் இருந்து எப்படி மீண்டு வருவது உள்ளிட்டவை ஆலோசிக்கப்படும்.
Source: Dinakaran
Image Courtesy:India Today