இரவு நேரங்களிலும் புதிய நாடாளுமன்ற கட்டுமானப்பணிகளை ஆய்வு செய்த பிரதமர் மோடி!

டெல்லியில் புதிதாக கட்டப்பட்டுவரும் நாடாளுமன்ற கட்டடத்தை நேற்று இரவு பிரதமர் நரேந்திர மோடி ஆய்வு செய்தார். புதிதாக 64 ஆயிரத்து 500 சதுர மீட்டர் பரப்பளவில் நாடாளுமன்ற அமையும் வகையில் அதன் கட்டுமானப்பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றது.

Update: 2021-09-27 03:08 GMT

டெல்லியில் புதிதாக கட்டப்பட்டுவரும் நாடாளுமன்ற கட்டடத்தை நேற்று இரவு பிரதமர் நரேந்திர மோடி ஆய்வு செய்தார். புதிதாக 64 ஆயிரத்து 500 சதுர மீட்டர் பரப்பளவில் நாடாளுமன்ற அமையும் வகையில் அதன் கட்டுமானப்பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில், திடீரென்று நாடாளுமன்றம் அமையும் இடத்தில் பிரதமர் நரேந்திர மோடி பணிகளை ஆய்வு செய்தார். அப்போது கட்டுமானத்தில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் மற்றும் பொறியாளர்களிடம் கேட்டறிந்தார். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள குளிர்கால கூட்டத்தொடரை புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் நடத்துவதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு செய்து வருகிறது.

மேலும், புதிய நாடாளுமன்ற கட்டத்தில் 1,272 உறுப்பினர்கள் அமரும் வகையில் வடிவமைக்கப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.

Source: Puthiyathalamurai

Image Courtesy: Central Minister, Shobha Karandlaje Facebook

Tags:    

Similar News