உலகிலேயே பழமையான மொழியான தமிழின் பெரிய அபிமானி: மன்கிபாத் நிகழ்ச்சியில் தமிழில் பேசிய பிரதமர் மோடி.!

இன்று பேசும்போது, சென்னையை சேர்ந்த குருபிரசாத் என்பவர், பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் உங்களின் மனதின் குரல் நிகழ்ச்சியை தவறாமல் கேட்டு ரசிப்பேன். அப்போது நீங்கள் தமிழில் பேசுவதை கேட்டு உற்சாகமடைந்துவிடுவேன் என கூறினார்.

Update: 2021-06-27 07:56 GMT

பிரதமர் மோடி பதவியேற்ற முதல் ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் அகில இந்திய வானொலியில் 'மன்கிபாத்' என்ற மனதின் குரல் மூலமாக நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார்.

அந்த வகையில் இன்று 78வது நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் பேசும்போது, முதலில் தமிழை பற்றி குறிப்பிட்டுதான் பேசுவார். பின்னர்தான் இந்தியில் நாட்டு மக்களிடம் உரையாற்றுவது வழக்கம்.


 



இன்று பேசும்போது, சென்னையை சேர்ந்த குருபிரசாத் என்பவர், பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் உங்களின் மனதின் குரல் நிகழ்ச்சியை தவறாமல் கேட்டு ரசிப்பேன். அப்போது நீங்கள் தமிழில் பேசுவதை கேட்டு உற்சாகமடைந்துவிடுவேன் என கூறினார். மேலும், தமிழ் மொழியின் சிறப்பு மற்றும் கலாச்சாரத்தை போற்று விதமாக உங்களின் பேச்சு அமைந்துள்ளது என கூறியுள்ளார்.

இந்நிலையில், அந்த கடிதம் பற்றி இன்றைய நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பதில் அளித்து பேசினார். குருபிரசாத் அவர்களே, நான் அதிகமான தடவை தமிழ்நாட்டு மக்களின் சாதனைகளை பற்றி பேசியுள்ளேன். திருக்குறள் மற்றும் திருவள்ளூவர் மீது மிகுந்த மதிப்பும், பற்றுக்கொண்டுள்ளேன்.




 


உங்களின் கடிதம் கிடைக்கப்பெற்றது மிகவும் மகிழ்ச்சியடைந்தேன் எனக் கூறினார். இந்த கடிதத்திற்கு தமிழிலும் பதில் அளித்துள்ளார். அப்போது நான் தமிழ் கலாச்சாரத்தின் பெரிய அபிமானி. உலகத்திலேயே பழமையான மொழியான தமிழின் பெரிய அபிமானி. என்னுடைய தமிழ் பேச்சில் சிறு சிறு குறைகள் இருக்கலாம். அதனை கற்றுக்கொள்வதற்கு எனது முயற்சியும் தமிழ் மீதான அன்பும் எப்போதுமே குறையாது. இவ்வாறு அவர் பேசினார்.

Similar News